Atlee: தமிழ் சினிமாதான் எல்லாம் கொடுத்துச்சி.. அதுக்காகத்தான் இதை செஞ்சேன்.. அட்லி சொன்னது இதுதான்!

சென்னை: இயக்குநர் அட்லியின் தமிழ் சினிமா பயணம் ராஜா ராணியில்தான் துவங்கியது. முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா கூட்டணியில் படத்தை இயக்கி பட்டையை கிளப்பினார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ஜாக்பாட் அடித்தது அட்லிக்கு. தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார்.

பாலிவுட்டையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று அவர் அடுத்ததாக களமிறங்கியது பாலிவுட் பாட்ஷாவின் படத்தில்தான். இதோ படமும் சிறப்பாக உருவாகி இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது.

Director Atlee hails Tamil cinema which gives what he is today

தன்னுடைய வாழ்க்கை தமிழ் சினிமா கொடுத்ததாக அட்லி உருக்கம்: இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய இயக்குநர் அட்லி தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான நண்பன், எந்திரன் படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து நேரடி களத்தில் அவர் ராஜா ராணி படத்தை இயக்கினார். தன்னுடைய முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா என முன்னணி நடிகர்களுடன் அவருக்கு கூட்டணி அமைந்தது. இந்தப் படம் பல படங்களின் காப்பியாக வெளியானதாக விமர்சனங்கள் எழுந்தது.

ஆனாலும் படம் மிகவும் ப்ரெஷ்ஷாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து, விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அட்லி. தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகளை விஜய்க்கு கொடுத்துள்ளார். விரைவில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Director Atlee hails Tamil cinema which gives what he is today

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் அட்லி. அவரது இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜவான் படம் இன்றைய தினம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே தற்போது சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

ஒருபக்கம் #boycottJawanmovie ஹேஷ்டாக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு அதிகளவில் காணப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான பதான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலை குவித்த நிலையில், ஜவான் படத்தின் வசூல் 1500 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய அட்லி படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இது என்ன தென்னிந்திய மொழிப் படமா என்று கேள்வி கேட்கும் வகையில் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியா மணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் என இணைக்கப்பட்டுள்ளனர். அட்லியும் தமிழ் திரையுலகில் இருந்து சென்றவர் என்பதால் இந்தப் படம் தென்னிந்திய அளவில் அதிகமாக ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது பேட்டியில் பேசியுள்ள அட்லி, தற்போது தன்னுடைய வளர்ச்சி, புகழ், பணம் எல்லாமே தமிழ் சினிமா தனக்கு கொடுத்தது என்று கூறியுள்ளார்.

இதனால் இந்தப் படத்தில் தமிழ் தொழிலாளிகள் அதிகமாக பலன் பெற வேண்டும் என்று நினைத்தே தான் பெப்சி தொழிலாளர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காக தென்னிந்திய தொழிலாளர்கள் 4500 பேருக்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர்களுக்கு ஜவான் படத்தின்மூலம் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அட்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X