Atlee: ஜவான் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வேன்.. அட்லீயின் விருப்பம்!

சென்னை: நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஜவான்.

கடந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய நிலையில், ஜவான் தற்போது 800 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

இன்னும் சில தினங்களில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Atlee happy on Jawan movie and says he would love to take the movie to Oscars

ஜவான் படத்தை ஆஸ்கருக்கு எடுத்து செல்ல அட்லீ விருப்பம்: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியான படம் ஜவான். முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி மாஸ் காட்டியது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.

நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர், ஷாருக்கின் இந்தப் படம் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். நான்கு ஆண்டுகள் ரசிகர்களை காத்திருக்க செய்ததாலோ என்னவோ, அடுத்தடுத்தப் படங்களை ஒரே ஆண்டில் வெளியிட்டுள்ளார் ஷாருக்கான், அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் கடந்த 7ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது.

இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் இயக்குநராக தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. அவர் பல படங்களில் இருந்து காட்சிகளை உருவியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிளில் அதிகமான ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை என்றபோதிலும் இந்தியில் தொடர்ந்து சிறப்பான வசூலை பெற்று வருகிறது.

தன்னுடைய விருப்பத்திற்குரிய ஹீரோ ஷாருக்கானை இப்படி ஒரு கேரக்டரில் பார்க்க, பாலிவுட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் இந்தப் படம் 800 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இந்த வெற்றி குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் இயக்குநர் அட்லீ.

Director Atlee happy on Jawan movie and says he would love to take the movie to Oscars

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள அட்லீ, ஜவான் படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சினிமாவிற்காக உழைத்துவரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் மற்றும் தேசிய விருதுகள் மீது மிகப்பெரிய ஆர்வம் எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ள அட்லீ, அந்த வகையில், ஜவான் படமும் கண்டிப்பாக ஆஸ்கர் விருதுக்கு செல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியை நடிகர் ஷாருக்கான் கண்டிப்பாக பார்ப்பார் என்பதால் இதுகுறித்து அவரும் யோசிப்பார் என்று தான் கருதுவதாகவும் அட்லீ கூறியுள்ளார். மேலும் தானும் தொலைபேசி மூலம் ஷாருக்கானிடம் ஜவான் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வது குறித்து கேட்பேன் என்றும் அட்லீ கூறியுள்ளார். ஜவான் படம் மிகச்சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய் படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X