அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்..தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!
சென்னை: இயக்குநர் அட்லீ தனது அடுத்தப்படும் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.
இதனை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை கொடுத்தார். மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சில காட்சிகள்
இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் வேறு சில படங்களில் இடம்பெற்ற காட்சிகளை ஒத்து இருப்பதால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் பிகில் படம் வெளியானது. இந்தப் படத்தின் சில காட்சிகளும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை ஒத்து இருந்தது.

அட்லீ படம் தயாரிப்பு
இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் அட்லீ தான் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தகாரம் படம்
ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரித்திருந்தார் இயக்குநர் அட்லீ. இந்நிலையில் மூன்று 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார். அதன்படி, 'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஏப்ரல் 14அம் தேதி
இந்தப் படத்தை விக்னராஜன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











