Atlee - நான் மட்டும்தான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்... அதனால்தான் என் மேல் விமர்சனம்.. அட்லீ ஓபன் டாக்
சென்னை: Atlee (அட்லீ) தன் மீது எதற்காக விமர்சனம் வருகிறது என்பது குறித்து இயக்குநர் அட்லீ மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில் அவர் இயக்கிய 4 படங்களில் பிகில் படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன.

ஜவான்: தமிழில் வலம் வந்த அட்லீ அடுத்ததாக ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்திருக்கும் முதல் படத்திலேயே ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் நேற்று வெளியாகி பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றுவருகிறது. எனவே தமிழை போல் ஹிந்தியிலும் அவர் தடம் பதித்துவிட்டார். இன்னும் சில வருடங்களுக்கு பாலிவுட்டில் அட்லீ பிஸியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
விமர்சனம்: அட்லீயின் இயக்கத்திற்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் அவர் மற்ற படங்களை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. அதாவது ராஜா ராணி படம் மௌனராகம் என்றும், தெறி சத்ரியன் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் அட்லீ அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. 7 ஸ்வரங்களுக்குள்தான் ட்யூன் போட முடியும் என இந்த விவகாரத்துக்கு ஒரே ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார்.
மேக்கிங்கில் மெர்சல்: படத்தை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தாலும் அட்லீயின் மேக்கிங் வேறு தரத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு. குறிப்பாக தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் அட்லீ மேக்கிங் அவ்வளவு ரிச்சாக இருக்கும். அதைப் பார்த்த பலரும் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட மேக்கிங்கை கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார். ஷங்கரின் உதவி இயகுநர் என்பதை நிரூபித்துவிட்டார் என புகழ்ந்தனர்.
எழும் விமர்சனத்துக்கு பதில்: இந்நிலையில் அட்லீ பிற படங்களை பார்த்து காப்பி அடிக்கிறார் என தொடர்ந்து எழும் விமர்சனத்துக்கு அவர் பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பதுதான் என் மீது வைக்கப்படும் விமர்சனம். பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்ற நண்பர்கள் சமூக பிரச்னை, ஆக்ஷன் என வெவ்வேறு விஷயங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கின்றனர்.
நான் மட்டும்தான் நம்பிக்கை: நான் ஒருவன் மட்டும்தான் நடிகர்களை மையப்படுத்தும் மாஸ் கமர்ஷியல் திரைக்கதை மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். எனவே என் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுத்து என்னுடைய கதாபாத்திரங்கள் வழியாக அவர்களை உணர்ச்சிவசப்படுத்துவதுதான் எனது நோக்கம். அதை இதுவரை சரியாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











