Atlee: அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லி.. அல்லு அர்ஜூன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: இயக்குனர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் துவங்கியது. முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன்னுடைய திரைக்கதையால் கட்டிப்போட்டார் அட்லி. இந்த படம் பல படங்களின் தொகுப்பாக வெளியானதாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக கொடுத்திருந்தார் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி மூன்று படங்களையும் ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்திருந்தார். மேலும் இந்த அடுத்தடுத்த படங்களின் வெற்றி பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு பெற்று தந்தது.


இந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி ஜவான் படத்தை மிகச் சிறப்பாக கொடுத்திருந்தார் அட்லி. இதனால் அட்லீயின் வேல்யூ இந்திய அளவில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அவர் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்திவிட்டார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அடுத்தடுத்து 4 படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டோலிவுட்டின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜூனுடன் இணையவுள்ளார் அட்லி. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Atlee joined with Actor Allu Arjun in his next and fans waiting for official announcement

இயக்குநர் அட்லி: ராஜா ராணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் அட்லி. இந்த படம் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லி அடுத்தடுத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று படங்களை விஜய் நடிப்பில் இயக்கி மூன்று படங்களையும் ஹாட்ரிக் வெற்றியாக மாற்றி காட்டினார். இதனால் சர்வதேச அளவில் அட்லியின் புகழ் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

ஷாருக்கான் -அட்லி கூட்டணி: இதையடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பும் அட்லிக்கு கிடைத்தது. ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள போதிலும் இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அட்லி. அடுத்ததாக அவர் யாரை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து காணப்பட்டது. சில மாதங்கள் தன்னுடைய புதிதாகப் பிறந்த குழந்தையுடன் செலவழிக்க உள்ளதாக அவர் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார், இதனிடையே தற்போது அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனுடன் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லி: தற்போது புஷ்பா 2 படத்தில் சுகுமாரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன், இந்த படத்தை தொடர்ந்து அட்லியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை முன்னதாகவே துவங்கியுள்ளார் அட்லி. தற்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்திற்காக 60 கோடி ரூபாய் வரை அட்லி சம்பளமாக பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜவான் படத்தின் 1000 கோடி ரூபாய் வசூல் மற்றும் படத்திற்கான வரவேற்பு அட்லியின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது. இதையடுத்து கோலிவுட்டில் அதிகமாக சம்பளம் பெறும் இயக்குனராக உயர்ந்துள்ளார் அட்லி.

ரசிகர்களை கவர்ந்த ஜவான்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது ஜவான் படம். இந்த படத்தின் அதிரி புதிரி வெற்றி அட்லி கேரியரையும் பெஸ்ட்டாக மாற்றியுள்ளது. இந்த படம் ஷாருக்கானிற்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கை கொடுத்துள்ளது. இதனிடையே, கோலிவுட்ல துவங்கிய அட்லியின் பயணம் பாலிவுட்டில் தொடர்ந்து தற்போது டோலிவுட்டிற்கு பயணமாகி உள்ளது. அல்லு அர்ஜுன் லீட் கேரக்டரில் நடிப்பதால் கண்டிப்பாக இந்த படம் பான் இந்தியா படமாகவே திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X