Jawan Copycat: ஏ.ஆர். முருகதாஸிடமே ஆட்டைய போட்டுட்டாரா அட்லீ.. அந்த படத்தின் காப்பி தானா ஜவான்?

சென்னை: அட்லிக்கு உள்ள ஜவான் திரைப்படம் எப்படி இருந்தாலும் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், எந்த எந்த படங்களின் கதைகள் மற்றும் காட்சிகள் இந்த ஜவான் படத்தில் அப்படியே சுட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக உள்ளனர்.

ஏற்கனவே விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படத்தின் கதை என ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜவான் திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தின் காட்சிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Director Atlee loots Ramana scenes for Jawan copycat trolls trending

ஏ.ஆர். முருகதாஸ் கிட்டேயே ஆட்டையா: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான மெமண்டோ படத்தின் காப்பி தான் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் என்று அவரை பலமாக வச்சு செய்தனர். நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படமும் நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நாயனாரின் கதை என்றும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் படத்தின் காட்சிகளையே ஷாருக்கானின் ஜான் படத்திற்காக அட்லீஸ்ட் சுட்டு உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

ஜவான் இல்லை ரமணா: விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பியாக இந்த படம் வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்த ரசிகர்களுக்கு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் காட்சிகள் இந்த படத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தற்போது ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனல் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விஷுவல் ட்ரீட்: எப்படி இருந்தாலும் வழக்கம்போல தனது படத்தை டாப் டக்கராக ரசிகர்களுக்கு ஏற்ற விசுவல் ட்ரீட்டாக இயக்குனர் அட்லி கொடுத்து அசத்தி விட்டார். அவர் சொல்வது போல ஏழு சுவரங்கள் மட்டும் தான் ஏற்கனவே வந்த கதைகளைத்தான் வித்தியாச வித்தியாசமாக தற்போதைய இயக்குனர்கள் எடுத்து ஹிட் கொடுத்து வருகின்றனர் என அட்லீக்கு ஆதரவாக ஏகப்பட்ட ரசிகர்கள் ஜவான் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் அட்லியின் முந்தைய படங்களுக்கும் இதேபோன்ற காப்பி கேட் ட்ரோல்கள் எழுந்தாலும் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூலை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X