Atlee On Vijay - விஜய் செய்த அந்த செயல்.. அட்லீ தளபதி ரசிகராக மாறிய தருணம் இதுதான்.. என்ன மனுஷன்யா
சென்னை: Atlee (அட்லீ) விஜய் ரசிகராக மாறிய தருணம் குறித்து இயக்குநர் அட்லீ பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன் தார, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் அந்தப் படம் மௌன ராகம் படத்தின் ரீமேக் என்ற விமர்சனமும் எழுந்தது.

விஜய்யின் ஃபேவரைட்: ராஜா ராணி படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அட்லீ விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்ததாக மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். இப்படி இரண்டு படங்கள் வரிசையாக விஜய்யுடன் இணைந்து ஹிட் கொடுத்ததை அடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
ஜவான்: தமிழில் அவர் மொத்தம் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கினார். அதனையடுத்து பாலிவுட் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். தமிழ்நாட்டில் படத்துக்கு விமர்சனஙக்ள் எழுந்தாலும் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதன் காரணமாக பாலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ரசிகர்: அட்லீ விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். ஜவான் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட அவர் விஜய்யை ரொம்பவே புகழ்ந்து பேசினார். அதேபோல் விஜய்யையும், ஷாருக்கானையும் வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக எந்தக் கதை யோசித்தாலும் அதில் விஜய் அண்ணாவைத்தான் முதலில் வைத்து பார்ப்பேன் என கூறும் அளவுக்கு அட்லீ விஜய்யின் ரசிகர். விஜய்யும் அட்லீ மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் ரசிகர்?: இந்நிலையில் விஜய்யின் ரசிகராக மாறிய தருணம் குறித்து அட்லீ மனம் திறந்து பேசியிருக்கிறார். ஒரு பேட்டியில் பேசிய அவர், "நண்பன் படத்தில் நான் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போது ஸ்பாட்டில் நான் செய்யும் வேலைகளை விஜய் கவனித்திருக்கிறார். படத்துடைய கடைசி நாள் ஷூட்டிங்கின்போடு என்னை அவரது கேரவனுக்கு அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு ஒரு கதை ரெடி செய் என சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார். அந்தத் தருணத்திலிருந்துதான் நான் விஜய்யின் தீவிர ரசிகராக மாறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











