Atlee: அடுத்த படத்துல 3000 கோடி கலெக்ஷன் எடுக்கனும்.. அது ரொம்ப ஈசிதான்.. அட்லீ சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியானது ஜவான்.

இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் அட்லீ தன்னுடைய சிறப்பான என்ட்ரியை பாலிவுட்டில் மேற்கொண்டுள்ளார். படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றி, இயக்குநர் அட்லீக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக அவர் மாறியுள்ளார்.

அடுத்தப்பட கலெக்ஷன் குறித்து இயக்குநர் அட்லீ சுவாரஸ்யம்: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருந்த ஜவான் படம் கடந்த மாதம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் காட்டியது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியிருந்த இந்தப் படத்தின்மூலம் இயக்குர் அட்லீ பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை வலிமையாக்கியுள்ளார். சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது.

Director Atlee opens up about his next movie in his interview

இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் இயக்குநர் அட்லீக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய அளவில் தயாரிப்பாளர்களின் பெஸ்ட் சாய்சாக அட்லீ மாறியுள்ளார். இவரது அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்ததாக விஜய்யின் தளபதி69 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாலிவுட்டிலும் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பேனரில் அட்லீ படமியக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தின் வரவேற்பை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் படமியக்க தனக்கு வாய்ப்பு வந்துள்ளதாக அட்லீ கூறியுள்ளார். இதையடுத்து அட்லீயின் அடுத்தப்படம் ஹாலிவுட்டில் நிகழுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அட்லீ பல படங்களில் இருந்து காட்சிகளை எடுத்து தன்னுடைய படங்களில் பயன்படுத்துவதாக தொடர்ந்து அவர்மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் மீறி ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சக்சஸ் கொடுக்கும் வித்தை அட்லீக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.

இதனிடையே நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து விரைவில் படமியக்கவுள்ளதாக அட்லீ பேட்டியொன்றில் கூறியிருந்தார். தற்போது அட்லீ கொடுத்துள்ள பேட்டியில் இருவரையும் தான் விட முடியாது என்றும் ஒருவர் தன்னுடைய மனைவி போன்றவர் மற்றவர் தன்னுடைய தாயை போன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தான் இருக்கும் இந்த உயரத்திற்கு காரணம் தளபதி விஜய் தான் என்றும் அவர் தன்மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த படங்களை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Director Atlee opens up about his next movie in his interview

அதேபோல நடிகர் ஷாருக்கானும் தன்மீது இருந்த நம்பிக்கையில் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை தனக்கு கொடுத்ததாகவும் இந்த நம்பிக்கைதான் தனக்கு அதிகமான பொறுப்பை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதுவரை இந்த வாய்ப்பை ஷாருக்கான் தனக்கு கொடுத்ததற்கான காரணம் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் நினைத்திருந்தால், இந்திய அளவில் முன்னணி இயக்குநர்களை தேர்வு செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து தான் படமியக்க விரும்புவதாக கூறியுள்ள அட்லீ, தன்னுடைய இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், அடுத்ததாக தான் இயக்கும் படத்தின் வசூல் 3000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடித்தால் இது மிகவும் எளிதாக நடக்கக்கூடிய விஷயம்தான் என்றும் அட்லீ மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X