Atlee: விஜய்க்காக அடுத்தப்பட டிஸ்கஷன்.. வேண்டாம்னு சொன்ன தளபதி.. அட்லீ சொன்ன உண்மை!

சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

முதல் படத்திலேயே சிறப்பான வெற்றியை கொடுத்திருந்த அட்லீ, தொடர்ந்து விஜய்யின்அடுத்தடுத்த படங்களை இயக்கி இந்திய அளவில் தன்னை வெற்றிப்பட இயக்குநராக மாற்றியுள்ளார்.

இந்தப்படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு படமியக்கும் வாய்ப்பு கதவைத் தட்டியது. முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷாவுடன் இணைந்து ஜவான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தள்ளார் அட்லீ.

Director Atlee opens up about the encouragement from Vijay to do Shah rukh khans Jawan movie

ஜவான் படத்தை இயக்க விஜய் கொடுத்த ஊக்கம் குறித்து பேசிய அட்லீ: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை சாத்தியமாக்கியவர் அட்லீ. இந்தப் படங்களுக்கு முன்பு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என முன்னணி நடிகர்களை கொண்டு ராஜா ராணி என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார் அட்லீ. அவரது இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானார். இந்தப் படத்தை தொடர்ந்தே விஜய்யின் படங்களை இயக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றிருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், மற்ற படங்களின் சாயல் இருப்பதாக விமர்சனங்களை பெற்ற போதிலும், ரசிகர்களின் மனங்களை கவரும் வித்தையை பெற்றுள்ளார் அட்லீ. இதுவே அவரது வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களின் வெற்றியே தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக அமைத்துக் கொள்ள வாய்ப்பாக அட்லீக்கு அமைந்துள்ளது. முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

ஜவான் படம் தற்போது சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல இந்த ஆண்டில் வெளியான பாலிவுட்டின் மூன்று படங்களில் ஷாருக்கானின் இரு படங்கள் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளன. முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான பதான் மற்றும் தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜவான் என ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி ரூபாய் கலெக்ஷன் படங்களை சாத்தியப்படுத்தியுள்ளார் ஷாருக்கான்.

இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதையடுத்து, இயக்குநர் அட்லீயும் தற்போது 1000 கோடி ரூபாய் கிளப் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ளார். இதனிடையே முன்னதாக தான் விஜய் மற்றும் பிரியாவுடன் இணைந்து அடுத்தப் படத்திற்கான டிஸ்கஷனில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஷாருக்கான் பட வாய்ப்பு குறித்து தான் விஜய்யிடம் தெரிவித்ததாக தன்னுடைய தற்போதைய பேட்டியில் அட்லீ தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட விஜய், தனக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இதுபோன்ற வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன்மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர தனக்கு அறிவுறுத்தியதாகவும் அட்லீ குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே தான் ஷாருக்குடன் இணைந்து ஜவான் படத்தில் பணியாற்றியதாகவும் தற்போது தனக்கு கிடைத்துள்ள பாராட்டுக்களுக்கு விஜய்தான் சொந்தக்காரர் என்றும் அட்லீ குறிப்பிட்டுள்ளார். தற்போது அட்லீக்கு ஹாலிவுட்டிலும் படமியக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அட்லீ தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

விஜய்யுடன் அட்லீ அடுத்தப்படத்தில் இணையவிருந்த நிலையில்தான் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கத் துவங்கியுள்ளார் அட்லீ. இந்நிலையில் தற்போது ஜவான் படத்தின்மூலம் சர்வதேச அளவில் தன்னை நிரூபித்துள்ள அட்லீ, மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கலவையான விமர்சனக்ளை பெற்ற போதிலும் அட்லீ, வெற்றிப்படத்திற்கான சூட்சமங்களை அறிந்தவர் என்பதால் அவர் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X