Atlee: ஜவான் பார்ட் 2க்கு ரெடியாகுங்க மக்களே.. அட்லீ சொல்லியிருக்கறத பாருங்க!
சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது ஜவான் படம்.
இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின்மூலம் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் ஜவான் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.
ஜவான் பார்ட் 2 குறித்து பேசிய இயக்குநர் அட்லீ: நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜவான் படம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், உலகளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ. இந்தப் படம் மூலம் நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளனர்.
ஜவான் படம் சில தினங்களிலேயே 700 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. வாரயிறுதி நாட்களையொட்டி இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளார் ஷாருக்கான். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய படங்களில் எப்போதுமே Open End க்ளைமாக்சையே தான் வைத்துள்ளதாகவும் ஆனால் எந்தப் படத்திற்கும் இரண்டாவது பாகம் குறித்து யோசித்து தான் இதை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் சூழ்நிலைகள் சிறப்பாக அமைந்தால் ஜவான் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பேன் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார். இந்தப் படத்திலும் Open endஐயே வைத்துள்ளதால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்புடன் விரைவில் ரசிகர்களை சந்திப்பேன் என்றும் முன்னதாக கிரிக்கெட் விக்ரம் ரத்தோர் பயோ பிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை எடுத்துள்ள படங்களில் விஜய்யின் தெறி, பிகில் மற்றும் மெர்சல் என 3 படங்களை எடுத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் அட்லீ. இதையடுத்து தற்போது ஜவான் படத்தையும் வெற்றிப் படமாக்கி பாலிவுட்டிலும் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளார். இதையடுத்து கரண் ஜோஹர் தயாரிப்பில் அவர் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதற்காக அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மீண்டும் விஜய்யை அட்லீ இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அட்லீயும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். சர்வதேச அளவில் ஜவான் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள நிலையில், அதன் இரண்டாவது பாகம் குறித்த அட்லீயின் பேட்டி தற்போது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாள அமைந்துள்ளது. மேலும் விஜய் மற்றும் ஷாருக்கானை இணைத்து புதிய படத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அட்லீ கூறியுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











