Director Atlee: அடுத்தப்படம் விஜய் சேதுபதி கூடத்தான்.. அப்ப சல்மான்கான்.. அட்லி பளீச்!

மும்பை: இயக்குநர் அட்லி ராஜா ராணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படமே இவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் அடுத்தடுத்த மூன்று படங்களை விஜய்யுடன் இணைந்து கோலிவுட்டில் இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இதையடுத்து இவரது மார்க்கெட் வேல்யூ எகிறிய நிலையில் தன்னுடைய 5வது படமாக ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் இணைந்திருந்தார்.

ஜவான் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடிகளுக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்நிலையில் அட்லியின் ஆறாவது படத்தில் சல்மான் கானுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அட்லி, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

atlee baby john vijay sethupathi

இயக்குநர் அட்லி: இயக்குநர் அட்லி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். இதுவரை ஐந்து படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ள நிலையில் சர்வதேச அளவில் அதிகமான கவனத்தைப் பெற்ற இயக்குநராகவும் அதிகமான சம்பளம் பெறும் இயக்குநராகவும் மாறியுள்ளார். ராஜாராணி என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த அட்லி, அடுத்தடுத்து தெறி, பிகில், மெர்சல் என விஜய்யை இயக்கினார். இந்த மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. இதையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அட்லி.

ஜவான் படத்தின் மாஸ் வெற்றி: இந்த படத்தை நான்கு ஆண்டுகள் மெனக்கெடலுடன் அவர் மேற்கொண்ட நிலையில் படம் ரிலீசாகி 1100 கோடிகளுக்கு மேல் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து அட்லிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது. அடுத்த படத்தில் பாலிவுட்டில் சல்மான்கானை அட்லி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தென்னிந்திய அளவில் நடிகர் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

atlee baby john vijay sethupathi

பேபி ஜான் படம்: இந்நிலையில் அடுத்ததாக அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய A6 படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அட்லி, விரைவில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு அதிகமான காலம் தேவைப்பட்டதாகவும் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த படம் சர்வதேச அளவல் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் நடிகர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் உள்ள நிலையில், அதைமீறி ரசிகர்களை தான் சர்ப்ரைஸ் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியுடன் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து தான் படம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.. இந்த படத்திற்கான வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார் அட்லி. இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த தயாரிப்பு குறித்து அவர் தற்போது பேசியுள்ளார். இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பேபி ஜான் பட பிரமோஷன்கள்: இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள பேபி ஜான் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பேபி ஜான். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் திருமணம் நடந்துள்ள நிலையில், பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்களில் அவர் பங்கேற்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X