Director Atlee: அப்பாவா விஜய்யோட நடிப்பு டச்சிங்கா இருந்துச்சு.. லியோ படம் குறித்து பேசிய அட்லி!
சென்னை: ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் அட்லி. முதல் படத்திலேயே பிரமாண்டமான கூட்டணியில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை கொடுத்திருந்தார் அட்லீ. இந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் படங்களை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.
இந்த படங்களை அடுத்துடுத்து ஹாட்ரிக் வெற்றிகளாக கொடுத்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பும் அட்லிக்கு கிடைத்தது. அதையும் சிறப்பாக பயன்படுத்திய அவர், ஜவான் படத்தை ஆயிரம் கோடி கிளப்பில் இணைத்து மாஸ் காட்டினார். இந்நிலையில் அடுத்ததாக சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை இணைத்து அட்லி படமியக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி: இயக்குனர் அட்லி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற இயக்குனராக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர். விஜய்யின் அடுத்தடுத்து பிகில், தெறி, மெர்சல் என படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர் அட்லி. இவரது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே இருந்து ரசிகர்களை எப்படி கவர வேண்டும் என்ற வித்தையை தெரிந்த இயக்குனர் இவர் என்பதை நிரூபித்தவர். தொடர்ந்து இந்த படங்களின் வெற்றி பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்களை வைத்து இயக்கிய ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கடந்த ஆண்டில் கொடுத்திருந்தார்.
ஜவான் படம்: ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடிகளை வசூலித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லியின் படம் குறித்த குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஜவான் படம் ரிலீஸ் ஆகி ஏறக்குறைய ஒரு ஆண்டை நெருங்கும் நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சல்மான்கான் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் அட்லி படமியக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சல்மானை இயக்கும் அட்லி: முன்னதாக தெலுங்கில் அல்லு அர்ஜுனை லீட் கேரக்டரில் வைத்து அட்லி படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அட்லி அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்யின் லியோ படம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு தனக்கு மிகப் பெரிய அளவில் பிடித்திருந்ததாகவும் விஜய்யை லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் காட்டி இருந்ததாகவும் அவரது ஆவேச அவதாரத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் லியோ படத்தில் காபி ஷாப் காட்சியை தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அதில் அப்பாவாக தன்னுடைய அழகான நடிப்பை விஜய் வெளிப்படுத்தி இருந்ததாகவும் அட்லி குறிப்பிட்டுள்ளார்.
தாறுமாறாக உயர்ந்த சம்பளம்: இதனிடையே சல்மான்கான் -அட்லி கூட்டணியில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் பீரியட் படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் படம் குறித்த அறவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளார் அட்லி. ஒரு படத்திற்கு அவர் 80 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











