Director Atlee: நான் படங்களை காப்பி செய்வதில்லை.. தன் மீதான விமர்சனம் குறித்து அட்லீ ஆதங்கம்!
சென்னை: இயக்குநர் அட்லீ தமிழில் விஜய்யை வைத்து பிகில், தெறி, மெர்சல் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்தவர்.
தற்போது அவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ஜவான் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய் -ஷாருக்கான் காம்பினேஷனில் படம் இயக்கவுள்ளதாக தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லீ: இயக்குநர் அட்லீ அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் மாஸ் இயக்குநராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். ராஜா ராணி படத்தில் துவங்கிய இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்தது. இந்தப் படங்களை அடுத்தடுத்து இயக்கிய அட்லீ, ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து இந்திய அளவில் முன்னணி இயக்குநராக தன்னை மாற்றிக் கொண்டார்.
ஷாருக்கானின் ஜவான் படம்: இந்தப் படங்களின் வெற்றி அட்லீக்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படம் மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக அமைந்துள்ளது. ஓடிடியில் வெளியான போதிலும் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தையடுத்து சர்வதேச அளவில் அட்லீ புகழடைந்துள்ளார். ஹாலிவுட்டில் படமியக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
அட்லீ அடுத்தப்படம்: ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தையும் அட்லீ அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 4 மாதங்கள் தான் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். ஆயினும் தற்போது தன்னுடைய அடுத்தப்படத்திற்கான வேலைகளை தான் துவக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவரது இயக்கத்தில் ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஷாருக்கான் -விஜய்யை இணைக்கும் அட்லீ: அடுத்ததாக அவர் விஜய்யை இயக்குவாரா அல்லது ஷாருக்கானை இயக்குவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், இவர்கள் இருவரையும் இணைத்து தான் அடுத்தப்படத்தில் இயக்கவுள்ளதாக தனது பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இருவரும் இந்த படத்திற்கு ஓகே சொல்லியுள்ளதாகவும் அட்லீ மேலும் கூறியுள்ளார். இதனிடையே அட்லீ மற்ற படங்களில் இருந்து தன்னுடைய படத்தில் அதிகமான காட்சிகளை காப்பி செய்வதாக உள்ள விமர்சனம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
படங்களை காப்பி செய்வதில்லை: தான் எந்தப் படங்களையும் காப்பி செய்வதில்லை என்றும் படங்களில் மற்ற படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை தவிர்க்க முடியாது என்றும் அது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற படங்களில் இருந்து காட்சிகளை காப்பி செய்வதாக தான் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தான் ஒவ்வொரு படத்திலும் காதல், போலீஸ், கிராம சப்ஜெக்ட் மற்றும் விளையாட்டு என வித்தியாசமான ஜானர்களில் கதைகளை எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பேட்டி: ஒவ்வொரு படத்திலும் மற்ற படங்களின் தாக்கம் இல்லை என்று நினைத்தே தான் கதையை உருவாக்குவதாகவும் ஆனால் நிஜத்தில் அது போல எந்த கதையையும் உருவாக்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் இணைந்து 3 படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்துள்ள அட்லீ, ஷாருக்கான் படத்தையும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரையும் இணைக்கவுள்ளதாக அட்லீ கூறியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











