மச்சக்காரன் தான்போல.. கமல்ஹாசனை இயக்கும் அட்லீ.. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?
சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மிளிர்ந்து வருபவர் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால், அந்த படத்தில் நடிப்பிலோ, திரைக்கதையிலோ, வசனங்களிலோ, ஒளிப்பதிவிலோ அல்லது படத்தின் வேறு எதாவது ஒரு அம்சத்திலோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெறும் வகையில் மிரட்டிவிட்டிருப்பார். இதனாலேயே இவரது படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் என வெறித்தனமாக இருப்பவர்கள் இன்றும் உள்ளனர். இதனாலேயே கமல்ஹாசனை தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமாக பலரும் உலக சினிமா மேடைகளில் கூறி வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்றால் அது, கல்கி 2898 ஏ.டி மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள். இதில் கல்கி 2898 ஏ.டி படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கமல். இந்தப் படம் நாளை அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியாகின்றது. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதும் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால் உலக அளவிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதேபோல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள படம் இந்தியன் 2. இந்தப் படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக பார்க்கப்படுகின்றது. படத்தின் ட்ரைலர் நேற்று அதாவது ஜூன் 25ஆம் தேதி வெளியானது. ட்ரைலரில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் வருவதாலும், அவர் பேசும் சுபாஸ் சந்திரபோஸின் வழியில் நான் என பேசும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியன் 2, கல்கி 2898 ஏ.டி ஆகிய படங்களின் புரோமோஷன் வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

தக் லைஃப்: இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் தற்போது மிகவும் வேகமாக உருவாகி வரும் படம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப். இந்தப் படத்தின் அறிவுப்பு வெளியானதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சிம்பு படத்தில் நடிப்பதால் துல்கர் சல்மான் விலகியதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்ததால், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் மணிரத்னம் வேறு வழியில்லாமல், சிம்புவிடம் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதாக கூறப்படுகின்றது. ஆனால் தக் லைஃப் படத்தில் சிம்புவை விட்டுத்தரக்கூடாது என்பதில் மணிரத்னமும் கமல்ஹாசனும் உறுதியாக இருந்துள்ளார்கள் எனவும் பேசப்படுகின்றது.

அட்லீ: இந்நிலையில் தக் லைஃப் படத்திற்கு பின்னர், கமல் ஹாசன் அட்லீ படத்தில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. அதாவது, கமல்ஹாசனை வைத்து அட்லீ இயக்க ஏற்கனவே முடிவெடுத்து, கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டதாகவும், தற்போது கல்கி 2898 ஏ.டி மற்றும் இந்தியன் 2 படன்களின் புரோமோஷனுக்காக மும்பை வரும் கமல்ஹாசனைச் சந்தித்து தனது ஸ்கிரிப்ட்டை சொல்ல திட்டமிடுள்ளதாகவும், தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.
சினிமாவின் பைபிள்: ஏற்கனவே கமல்ஹாசன் குறித்து அட்லீ பேசியது இணையத்தில் வேகமாக தற்போது பகிரப்பட்டு வருகின்றது. அதாவது " நான் கமல்ஹாசன் சாருடன் வேலை செய்ய ஆசைப்படுகின்றேன். ஒருநாள் அவருக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டு அவரிடம் செல்வேன். சினிமாவின் பைபிள், சினிமாவின் என்சைக்லோபீடியா என்றால் அது கமல்ஹாசன் சார் தான்" என பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தற்போது அட்லீ சல்மான் கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications











