செல்ல நாயுடன் முத்தமிட்டுக்கொஞ்சும் இயக்குனர் அட்லி!
சென்னை : கோலிவுட்டை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தைப் பதிக்க உள்ளார் இயக்குனர் அட்லி.
ராஜா ராணி மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர்.
அடுத்து ஷாருக் கானை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் அட்லி இப்போது செல்ல நாயுடன் முத்தமிட்டு கொஞ்சும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ராக்கெட் வேகத்தில்
இப்போது தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் ராக்கெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் அட்லி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் . ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

ஹாட்ரிக் வெற்றிகளை
விஜய்யின் வெறித்தனமான ரசிகரான அட்லி இரண்டாவது திரைப்படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்க தெறி என்ற பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ராக்கெட் வேகத்தில் பயணித்துக் கொண்டு உள்ளார்.

ஷாருக்கானை சந்தித்து
அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து இயக்க உள்ளார் என சில தகவல்கள் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தாலும் அட்லியின் முழு கவனமும் இப்பொழுது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் சூப்பர் ஸ்டாராக உள்ள ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க மும்முரம் காட்டி வருகிறார் அட்லி. அவ்வகையில் பலமுறை ஷாருக்கானை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் அவரும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

முத்தமிட்டுக் கொஞ்சியவாறு
விரைவில் ஷாருக்கான் படத்தை இயக்கி இந்திய அளவில் திரும்பிப் பார்க்கக் கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பயணிக்க இருக்கும் அட்லி டாக் டவுனில் அடுத்த படத்திற்கான கதையை தீவிரமாக தயார் செய்து வரும் அதே சமயம் செல்லமாக வளர்த்துவரும் நாய்க்குட்டி உடன் முத்தமிட்டுக் கொஞ்சியவாறு எடுத்த க்யூட் வீடியோவை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











