Don't Miss!
- News
இலங்கை: சம்பளம் இல்லாத அமைச்சர்கள் பதவியேற்பு- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற கேண்டீன் இழுத்து மூடல்!
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Finance
ஸ்டார்ட்அப் ஊழியர்களே உஷார்.. அடுத்த 30 நாள் திக் திக்..! #Layoff
- Lifestyle
இந்த 6 ராசிக்காரர்கள் காதலிப்பதில் பலே கில்லாடிகளாம்...இவங்கள காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்!
- Automobiles
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- Sports
ஐபிஎல் இறுதிப் போட்டி - ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிஷ்யனை பாராட்டிய இயக்குநர் அட்லி.. சிவகார்த்திகேயனும், சிபியும் கலக்கிட்டீங்கடா என செம ட்வீட்!
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் குரு அட்லி டான் படத்தை பார்த்து விட்டு சிஷ்யனையும் நண்பன் சிவகார்த்திகேயனையும் பாராட்டி போட்டுள்ள ட்வீட் தற்போது டிரெண்டாகி வருகிறது.
மேலும், நடிகர் விஜய்யுடன் மெர்சல் படப்பிடிப்பில் சிபி சக்கரவர்த்தி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர் தானாம்.. டாப்ஸி ஹீரோயின்.. அப்போ அட்லி படம்?

ஷங்கர் பண்ணது
ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், படம் சூப்பராக இருக்கு நல்லா பண்ணியிருக்க அட்லி என இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருந்தார். இந்நிலையில், அவரை போலவே தற்போது தனது சிஷ்யன் சிபி சக்கரவர்த்தியை அட்லி பாராட்டி உள்ளார்.

அட்லி பாராட்டு
டான் திரைப்படம் எமோஷனலான ஃபேமிலி என்டர்டெயினர். சிவகார்த்திகேயன் சூப்பர் பர்ஃபார்மன்ஸ் டா, படம் ரொம்ப அருமையா இருக்கு.. அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு தந்ததற்கு ரொம்பவே நன்றி. சிபி சக்கரவர்த்தி டைரக்டர் சார்.. உன்னை பார்த்து ரொம்ப பெருமையா இருக்குடா.. தொடர்ந்து கலக்கு என மனதார பாராட்டி உள்ளார்.

மெர்சல் சூட்டிங்கில்
மெர்சல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் உடன் பாடல் காட்சியில் உதவி இயக்குநராக பணியாற்றிய டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து விஜய் ரசிகர்க்ள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யுடன் சிபி
மெர்சல் படத்தில் அப்பா வெற்றிமாறன் கெட்டப்பில் விஜய் இருக்கும் போது அவருடன் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி செம ஹேப்பியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் விஜய் ரசிகர்கள் அட்லியின் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயனை அடுத்து சிபி சக்கரவர்த்தி விஜய்யை இயக்குவாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

லயன் அப்டேட்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் லயன் படத்தின் அப்டேட் எப்போது தான் வரும் என அட்லியின் ட்வீட்டுக்கு கீழ் அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பதான் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி உடன் ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் அறிவிப்பும் வந்து விட்டது. ஆனால், இன்னமும் அட்லி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏன் வரவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.