க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட தளபதி பட இயக்குநர்... நாய்க்குட்டியும் அழகு அள்ளுதே

சென்னை : ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டைரக்டர் அட்லி.

விஜய் படங்களை இயக்கியதன்மூலம் இவர் இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

தற்போது ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் படம் இயக்கி வருகிறார் அட்லி.

இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக தனது திரைப்பயணத்தை துவக்கியவர். தொடர்ந்து அவருடன் நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அடுத்ததாக ஆர்யா -நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை சிறப்பான இயக்குநராக வெளிப்படுத்தினார்.

விஜய்யுடன் 3 படங்கள்

விஜய்யுடன் 3 படங்கள்

தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயத்திக் கொண்டுள்ளார். தயாரிப்பிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அதிக வசூலை ஈட்டிய ராஜா ராணி

அதிக வசூலை ஈட்டிய ராஜா ராணி

இவரது முதல் படமான ராஜா ராணி 4 வாரங்களில் 500 மில்லியனை சம்பாதித்து கொடுத்தது. ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விஜய் அவார்டையும் இவருக்கு பெற்றுத் தந்தது. மேலும் அடுத்த படத்திலேயே விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

2014ல் திருமணம்

2014ல் திருமணம்

நண்பன், பிகில் படங்களில் பாடல்களிலும் இவர் தோன்றியிருப்பார். மேலும் விஜய் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இதனிடையே கடந்த 2014ல் இவர் நடிகை கிருஷ்ண பிரியா என்பவரை மணந்தார். இவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

தொடர் பதிவுகள்

தொடர் பதிவுகள்

அட்லியுடன் எடுத்துக் கொள்ளும் வித்தியாசமான புகைப்படங்கள், கொண்டாட்ட வீடியோக்கள் ஆகியவற்றை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பிரியா பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது பொங்கல் கொண்டாட்டத்தையொட்டிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

நாய்க்குட்டியுடன் போஸ்

நாய்க்குட்டியுடன் போஸ்

அட்லியும் பிரியாவும் இணைந்துள்ள இந்த புகைப்படத்தில் பிரியா கைகளில் நாய்க்குட்டியும் அவர்கள் முகங்களில் புன்னகையும் காணப்படுகிறது. மேலும் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X