Producer Atlee: அட்லி தயாரிக்கும் பாலிவுட் படம்.. நாளை வெளியாகும் டைட்டில்.. டைட்டில் இதுவா!

சென்னை: இயக்குநர் அட்லியின் திரையுலகப் பயணம் ராஜா ராணி படத்தின்மூலம் துவங்கியது. முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, சந்தானம் என மாஸ் கூட்டணியுடன் களமிறங்கிய அட்லி, அசத்தலான திரைக்கதை மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்தை வெற்றிப்பட வரிசையில் இணைத்தார். இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றி, அடுத்ததாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அட்லீ, அடுத்தடுத்து மூன்று விஜய் படங்களை இயக்கி மூன்றையும் ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உரியவரானார்.

இந்தப் படங்கள் பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பை அள்ளித்தர, அதையும் சிறப்பாக பயன்படுத்தி கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படத்தை 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைத்தார். இந்தப் படத்தில் நடித்து மற்றும் தயாரித்த ஷாருக்கான் இதன்மூலம் அதிகமான உற்சாகத்தில் உள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகி ஷாருக்கான் ரசிகர்களை குஷியாக்கியது. இதனிடையே மீண்டும் ஷாருக்கானுடன் அட்லி இணையவுள்ளதாகவும் இந்தப் படத்தில் விஜய்யும் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Director Atlee production movie VD18 title teaser to be released tomorrow

இயக்குநர் அட்லீ: இயக்குநர் அட்லி, இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதனாலேயோ என்னவோ அவரது படங்களில் பிரம்மாண்டமும் இழையோடுகிறது. ஸ்கிரீன்ப்ளேவில் மிரட்டலான எக்ஸ்பீரியன்சை ரசிகர்களுக்கு கடத்துவதில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் அட்லி, முதல் படத்திலேயே ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் என மாஸ் கூட்டணியுடன் ராஜா ராணி படத்தை கொடுத்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் காப்பி இயக்குநர் என்ற பெயரை தந்த போதிலும் வசூலில் மிரட்டியது. படத்தின் மேக்கிங் பேசப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லி வீட்டுக் கதவை தட்டியது.

விஜய் -அட்லீ கூட்டணி: விஜய் -அட்லி கூட்டணியில் அடுத்தடுத்து வெளியான தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களுமே சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. இதனால் சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநர் என்று பெயரெடுத்துள்ளார் அட்லி. கடந்த ஆண்டில் ஷாருக்கான் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஜவான் படத்தை மிரட்டலாக கொடுத்திருந்தார் அட்லி. இந்தப் படம் அவருக்கு 1000 கோடி கிளப் இயக்குநர் அந்தஸ்தை கொடுத்துள்ளது. இதையடுத்து தன்னுடைய அடுத்தப்படத்தின் கதையை எழுதி வருகிறார். அடுத்ததாக ஷாருக்கான் -விஜய் கூட்டணியில் படமியக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அட்லீ தயாரிப்பு: முன்னதாக தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்திற்காக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக பாலிவுட்டில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. VD18 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் நாளைய தினம் கிளிம்ப்சுடன் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 54 வினாடிகள் அடங்கிய இந்த டீசருக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழில் வெளியான விஜய்யின் தெறி ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது.

தெறி படத்தின் ரீமேக்: அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காளீஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக நடந்துவரும் நிலையில், படம் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் இயக்குநர் மகேந்திரன் நடித்த ரோலில் இவர் நடித்துவருகிறார். படத்தின் சூட்டிங் துரிதமாக நடந்து வரும் நிலையில் வரும் மே மாதத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய அட்லீ திட்டமிட்டு வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய தினம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் பேபி ஜான் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X