Atlee: ஜவான் படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம்.. அட்லீ பகிர்ந்த சீக்ரெட்!

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது ஜவான்.

இந்தப் படத்தின் வசூல் தாறுமாறாக தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் அட்லீ, படம் குறித்து மகிழ்ச்சியை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Director Atlee revealed the secret about Actor Vijay not acting in Jawan movie

ஜவான் படத்தில் விஜய் நடிக்காததன் காரணத்தை பகிர்ந்த அட்லீ: பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் இந்த ஆண்டிலேயே இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடைய மகன் கைது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சிக்கியிருந்தார் ஷாருக்கான். இதனால் அவரது படங்கள் எதுவும் ரிலீசாகாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் ரிலீசான பதான் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவந்த ஜவான் படம் கடந்த ஜூலை மாதத்திலேயே ரிலீசாக திட்டமிடப்பட்டது. ஆனால் சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் ஜவான் படம் ரிலீசாகி தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் வசூல் 1000 கோடி ரூபாய்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் சஞ்சய் தத், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் முன்னதாக நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விஜய்யின் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அட்லீக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய புரிதல் உள்ளதால், விஜய் கண்டிப்பாக இந்த ரோலில் நடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது எதுவும் நடக்காததால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இயக்குநர் அட்லீ மனம் திறந்துள்ளார். ஜவான் படத்தின் முதல் நாள் சூட்டிங் துவங்கியதில் இருந்து, காட்சி அமைப்புகள், ஷெட்யூல்கள் உள்ளிட்டவை குறித்து தான் அடுத்தடுத்து விஜய்யிடம் தான் ஆலோசனை கேட்டதாகவும் அவர் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும் அட்லீ கூறியுள்ளார்.

மேலும் விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ள அட்லீ, தான் இதுவைர இயக்கியுள்ள 5 படங்களில் 3 படங்கள் விஜய்யுடன் இணைந்துள்ளதாகவும், அவர் எப்போதும் தன்னுடைய வளர்ச்சியில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் ஷாருக்கை இணைத்து தான் புதிய கதையை எழுதவுள்ளதாகவும் இது விரைவில் நடக்கும் என்றும் அட்லீ கூறியுள்ளார்.

அதனால்தான் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தான் விஜய்யிடம் கேட்கவில்லை என்று தெரிவித்த அட்லீ, விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணியில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ. முதல் படமே ஷாருக்கானுடன் அமைந்த நிலையில், அவர் அதை சிறப்பாக பயன்படுத்தி வெற்றிப் படமாக கொடுத்துள்ளார். விரைவில் 1000 கோடி ரூபாய் டைரக்டர் கிளப்பில் இந்தப் படம் மூலம் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X