பாலிவுட் கனவு தகர்ந்ததா ?.. அட்லியை கழட்டிவிட்ட ஷாருக்.. சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டா பதிவு!

சென்னை : கோலிவுட்டில் மாஸ் இயக்குநர் என பெயர் எடுத்த அட்லியின் பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

ஆர்யா,நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இந்த 4 படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.

பாலிவுட்டில் வெற்றி கொடியை நாட்ட தயாரான அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார்.

அட்லியின் பாலிவுட் கனவு

அட்லியின் பாலிவுட் கனவு

2020ம் ஆண்டு ஷாருக்கான் அட்லியின் படத்திற்கு ஒகே சொல்லவே குஷியாகிப் போன அட்லி அந்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்த படத்தில் தனது ராசியான நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார். இப்படத்திற்கு லயன் என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய போதே கொரோனாவால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

தேதியை ஒதுக்கவில்லை

தேதியை ஒதுக்கவில்லை

இதையடுத்து, ஷாருக்கானின் மகன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால், ஷாருக்கன் ஒப்பந்தமான அனைத்து படங்களும் அப்படியே நின்றுவிட்டன. ஓரளவு பிரச்சனை முடிந்ததை அடுத்து தனது படத்திற்கு ஷாருக்கன் தேதியை ஒதுக்குவார் என்று அட்லி, எண்ணியிருந்த நிலையில் வேறு ஒரு இயக்குநரின் படத்தில் ஷாருக்கன் நடித்து வருகிறார்.

அப்செட்டான அட்லி

அப்செட்டான அட்லி

ஷாருக்கானிடமிருந்து அழைப்பு வராதா என கிட்டத்தட்ட 2 வருடத்திற்கும் மேலாக காத்திருந்த அட்லி, ஷாருக்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்கு அவர் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தான், உங்கள் படத்தில் நடிக்க முடியும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் ஷாருக். இதனால் அப்செட்டான அட்லி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுறது.

வருத்தப்படும் காலம் வரும்

வருத்தப்படும் காலம் வரும்

இதையடுத்து, அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் புகைப்படத்தை பதிவிட்டு, "உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் அதற்காக வருத்தப்படும் காலம் ஒன்று உங்களது வாழ்க்கையில் வரும்" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுதான் தற்போது திரை வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அட்லியை கழட்டிவிட்ட ஷாருக்

அட்லியை கழட்டிவிட்ட ஷாருக்

யாரை மனதில் வைத்து அட்லி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு சோஷியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி உள்ளது. ஷாருக்கான் அட்லியிடம் ஸ்கிரிப்டில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கூறியதாகவும், அதை அட்லி மறுத்ததால் அட்லியை ஷாருக்கான் கழட்டிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கன் படு பிஸி

ஷாருக்கன் படு பிஸி

தற்போது ஷாருக்கான் பதான் மற்றும் சல்மான் கான் நடித்த டைகர் 3 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். பதானின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில், ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X