நியூ லுக்... நியூ ஹேர் ஸ்டைல்… இணையத்தை கலக்கும் அட்லி !
சென்னை : தழிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லி. முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என பெயர் எடுத்துள்ளார்.
இதையடுத்து, தெறி , மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளார்.
அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புது விதமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்றுள்ளது.

வெற்றி இயக்குனர்
சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

தெறிக்கவிட்ட தெறி
ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து படங்களை இயக்கினார்.

விரைவில் படப்பிடிப்பு
அட்லி ஷாருக்கானை வைத்து படத்தை இயக்குவது உறுதியாகி உள்ளது. ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலையை முடித்த பிறகே அட்லி படத்தில் நடிப்பாராம். இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஏற்ற ஹீரோயினை ஒப்பந்தம் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் அட்லி.

பல லைக்குகள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், புது விதமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த ஹேர் ஸ்டைலால் அட்லியின் அழகு மேலும் கூடிஉள்ளது. இந்த புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அட்லி, Love the Styling bro aalim hakim thanks so much என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது பல லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











