அப்பாவாக போகிறாராம்.. செம சந்தோஷத்தில் பிரபல இயக்குநர்.. தீயாய் பரவும் மனைவியின் போட்டோ!
சென்னை: பிரபல இயக்குநரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
பிரமாண்ட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி. எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஸீம், சத்தியராஜ், சந்தானம் என ஒரு பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து இயக்கியிருந்தார் அட்லி.

விஜயை வைத்து
இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக மணிரத்னத்தின் மவுன ராகம் படத்துடன் ஒப்பிட்டு பேசினாலும் படம் வசூலையும் விருதுகளையும் குவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை கொடுத்தார் இயக்குநர் அட்லி.

அனுஷ்காவின் தங்கை
இவரது படங்களில் இடம் பெறும் சில காட்சிகள் மற்ற சில படங்களை ஒத்து இருப்பதால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்வது உண்டு. இந்நிலையில் சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்த நடிகை பிரியாவை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அட்லி.

கர்ப்பம்?
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் பிரியா. இந்நிலையில் பிரியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்த பிரியாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த போட்டோவில் பிரியாவும் உடல் எடை கூடி அம்சமாக உள்ளார்.

உறுதிபடுத்தவில்லை
மனைவி கர்ப்பமாக இருப்பதால் அட்லீ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தகவலை அட்லீ தரப்பில் இருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை. இது போன்று ஏற்கனவே பலமுறை அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி கடைசியில் வதந்தி என்று முடிந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது பிரியா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











