பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா?ஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்!

Recommended Video

Bigil Atlee Salary : பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா?-வீடியோ

சென்னை: இயக்குநர் அட்லி பிகில் மற்றும் ஷாருக்கான வைத்தும் இயக்கும் படங்களுக்காக பெற்ற சம்பளம் எவ்வளவு என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இயக்குநர் அட்லி எடுக்கும் படங்கள் பெரும்பாலும் மற்ற படங்களின் கதைக்கருவை ஒட்டியே எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரை காப்பி பேஸ்ட் டைரக்டர் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிகில் ரிலீஸ் தேதி

பிகில் ரிலீஸ் தேதி

இந்த படத்திற்கான சென்சார் ஃபார்மாலிட்டிஸ் முடிந்த நிலையில் படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அட்லீ சம்பளம்

அட்லீ சம்பளம்

இதனிடையே பிகிலின் ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்கள், சக் தே இந்தியா உள்ளிட்ட பல படங்களில் இருந்து சுட்டது என விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் பிகில் படத்திற்காக இயக்குநர் அட்லீ பெற்ற சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 25 கோடி சம்பளம்

ரூ. 25 கோடி சம்பளம்

பிகில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் பிகில் படத்திற்காக இயக்குநர் அட்லீக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்ளோ சம்பளமா?

இவ்ளோ சம்பளமா?

இதேபால் பாலிவுட் கிங், ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திற்கும் அட்லிக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட நெட்டிசன்கள் மற்ற படங்களை சுட்டு படம் எடுக்கும் டைரக்டருக்கு இவ்ளோ சம்பளமா என கேட்டு வருகின்றனர்.

அட்லீ தரப்பு பதில்

அட்லீ தரப்பு பதில்

சம்பளம் குறித்த தகவல் தீயாய் பரவி வரும் நிலையில், இதுகுறித்து அட்லீ தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமோ பதிலோ தெரிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X