நான் ஒரு 'லைச்னோபைட்'.. இயக்குநர் அட்லி சொன்ன சுவாரசியமான ரகசியம்!

சென்னை: இயக்குநர் அட்லி தன்னைப் பற்றிய ஒரு சுவாரசியமான ரகசியத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நஸீம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார் அட்லி.

சுவாரசியமான தகவல்

சுவாரசியமான தகவல்

அட்லி தனது 5வது படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். அது தமிழ் படமா அல்லது இந்தி படமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அட்லி தன்னைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பகலில் தூக்கம்

பகலில் தூக்கம்

அதாவது தான் ஒரு லைச்னோபைட் என்றும் பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவில் வேலை பார்ப்பவர் என்றும் பதிவிட்டுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உட்பட கிரியேட்டிவ் துறையில் உள்ள பல பிரபலங்கள் தங்களுக்கு இரவில் பணியாற்றுவதுதான் வசதி என கூறியுள்ளனர். அந்த வகையில் அட்லியும் அதையே கூறியுள்ளார்.

பதான் படத்தில் பிஸி

பதான் படத்தில் பிஸி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான், அட்லியை சந்தித்தார். இருவரும் இந்தியில் படம் பண்ணுவது குறித்து ஆலோசித்தனர். ஆனால் ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த பின்னர் அட்லியின் படம் தொடங்கும் என தெரிகிறது.

Recommended Video

TEDDY பொம்மை உருவான விதம் | DIRECTOR SHAKTI SOUNDAR RAJAN EXCLUSIVE | FILMIBEAT TAMIL
தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இதனிடையே அட்லி விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X