கமல்ஹாசன் ஒரு என்சைக்ளோபீடியா.. இந்தியன் 2 ஒரு முக்கியமான படம்.. அட்லீ பேச்சு!
மும்பை: இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அட்லீ, கமல்ஹாசன் அவர்கள் சினிமாவை பொருத்தவரை ஒரு பைபிள் மற்றும் என்சைக்ளோபீடியா அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று இந்த விழாவில் அட்லீ பேசினார்.
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை படத்தின் டிரைலர் வெளியானது. அதில், பலவிதமான கெட்டப்புகளில் கலக்கும் கமல்ஹாசன் வர்ம கலையில் மிரட்டியுள்ளார். தப்பு செய்பவர்கள் சேனாபதியிடம் இருந்த தப்பிக்க முடியாது, என்ற பரபரப்பான அனல் தெறிக்கும் காட்சிகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் வெளியாகி உள்ளது இந்தியன் 2 டிரைலர்.

இந்தியன் 2 டிரைலர்: அதுமட்டுமில்லாமல், 28 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பழைய இந்தியன் போல இல்லை என புலம்பித் தவிக்கும் நேரத்தில், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஷங்கரின் பிரம்மாண்ட விஷுவல்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் பிளாக்குகளையும் டூபீஸ் உடையணிந்த பெண்ணின் வயிற்றில் ஓடும் ஆமைக் காட்சிகளையும் பார்த்து ஆஹா என வாய் பிளந்து இருக்கின்றனர் ரசிகர்கள்.
அட்லீ புகழாரம்: இந்த நிலையில் நேற்று நடந்த இந்தியன் 2 படத்தின் புரமோஷன் விழாவில் மும்பையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த், அனிருத், அட்லீ என பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அட்லீ, நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே 'இந்தியன் 2' கதை பற்றி இருவரும் உரையாடியிருக்கிறோம். நிச்சயம் இத்திரைப்படம் இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
சினிமாவின் என்சைக்ளோபீடியா: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பைபிள் கமல் சார். அவர் சினிமாவுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது படங்களைப் பார்த்து நான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவை பொருத்தவரை ஒரு பைபிள் மற்றும் என்சைக்ளோபீடியா. என் மகன் ஒருவேளை எதிர்காலத்தில் சினிமாவுக்கு வர நினைத்தால், முதலில் நான் அவனுக்கு கூறும் அறிவுரை கமல்ஹாசனின் அனைத்து படங்களையும் பார், சினிமா என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவேன். காலம் வரும்போது அவருக்காக ஒரு திரைக்கதையை தயார் செய்வேன், கண்டிப்பாக அவருடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன் என்று அட்லீ அந்த விழாவில் பேசி இருந்தார்.
கேம் சேஞ்சர்: இந்திய 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இப்படத்தில், ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தை போல, இழுத்துக்கொண்டு போகாமல், கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்காவது ரிலீஸ் பண்ணிடுங்க ஷங்கர் சார் உங்களுக்கு புண்ணியமாக போய் விடும் என்றும், இதே போல ஒரே ஒரு டீசரை மட்டும் இறக்கி விடுங்க எங்களை சந்தோஷப்படுத்துங்க என ராம் சரண் ரசிகர்கள் ஷங்கரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில், ராம்சரண் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போகும் அளவுக்கு கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்டும் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











