பொத்துனு ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ… ஒரு நிமிஷம் ஆடிப்போன பிரபலங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட் மோஸ்ட் வாண்டடு இயக்குநராகிவிட்டார். பாலிவுட் நடிகர்கள் பலர் அட்லீ அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில், விருது நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கானின் காலில் பொத்துனு விழுந்து அனைவரையும் ஒரு நிமிடம் திணறடித்துவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, இன்று அவரை விட சம்பளம் வாங்கும் இயக்குநராக உயர்ந்து விட்டார். இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டாலும், தமிழ் நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அட்லீ மட்டுமே கலந்து கொண்டனர். இதைவிட வேறு என்ன பெருமை அட்லீக்கு வேண்டும்.

பொத்துனு காலில் விழுந்தார்: ஜவான் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் தனக்கு அடுத்தடுத்து கிடைக்கும் நல்ல பெயரால், மகிழ்ச்சியில் திக்குமுடிக்காடி போய் இருக்கும் அட்லீ, ஜீ சினிமா விருது 2024 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. விருதை அறிவித்ததும் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்ற அட்லீ, பாலிவுட் வாழ்க்கை கொடுத்த ஷாருக்கானின் காலில் பொத்துனு விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். உடனே ஷாருக்கான அட்லீயின் தோள்களை தூக்கி எழுப்பி, அவரை கட்டி அணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சிறந்த இயக்குநர்: இதையடுத்து, விருதை பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொண்ட இயக்குநர் அட்லி, இப்படத்திற்கு ஏற்கனவே, பிலிம்பேர் விருதுகளில் ஜவான் திரைப்படத்துக்கு சிறந்த ஆக்ஷன், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதுகள் கிடைத்திருந்தன. ஜவான் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகலாம் என்று படத்தின் வெற்றிக்கு பிறகு கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாஸ் காட்டிய ஜவான்: ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் வெற்றியை ருசித்தது. இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய்சேதுபதி,யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் தனது தடத்தை பதித்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
பேபி ஜான்: ஜவான் படத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான அட்லீ, தெறி இந்தி ரீ மேக் படத்தை தயாரித்து வருகிறார். ஆக்ஷன் எண்டர்டெயினர் பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிக கப்பி ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். காலிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மே 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











