பாலிவுட் சென்ற அட்லீ.. அவரது மனைவி செய்யப்போவது என்ன தெரியுமா?.. செம ஃபார்மில் இருக்காங்க போங்க
சென்னை: கோலிவுட்டின் ஃபேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்த அட்லீ இப்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தற்போது அவர் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். யார் நடிக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அட்லீயின் மனைவி ப்ரியா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

முழுக்க தமிழ் டீம்தான்: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத் கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் மழை: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறது. இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மீண்டும் அட்லியூடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.
கலவையான விமர்சனம்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இப்போது பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துவருகிறார். அது தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளே மாறிய அட்லீ: பாலிவுட் சென்ற பிறகு ஆளே மாறிவிட்டதாக அட்லீயை பற்றி சிலர் பேசுகிறார்கள். அதாவது எந்த ஃபங்ஷன் சென்றாலும் தனது மனைவி ப்ரியாவையும் உடன் அழைத்து செல்கிறார். அண்மையில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்துக்கும் ப்ரியாவை அழைத்து சென்றார். ஆனால் அந்தத் திருமணத்தில் அம்பானியின் மகன் பற்றி ப்ரியாவின் ஜாக்கெட்டில் எழுதியிருந்த வாசகத்தை அட்லீ காண்பித்ததை வைத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள்.
ப்ரியாவின் தொழில்: இந்நிலையில் ப்ரியா அட்லீ குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ப்ரியா புதிய தொழில் ஒன்றை தொடங்கவிருபதாகவும்; அது ஃபேஷன் தொடர்பான தொழிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் லோகோ இன்று வெளியாகும் என்று ப்ரியாவே அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டை குறி வைத்துதான் இந்தத் தொழிலை அவர் தொடங்குகிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











