Atlee: டோலிவுட்டில் மாஸ் என்ட்ரி.. அல்லு அர்ஜூன் -அட்லீ கூட்டணி.. மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் அட்லீயின் பாலிவுட் என்ட்ரி படமே மிகவும் மாஸாக அமைந்தது. பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்து ஜவான் படத்தை கொடுத்திருந்தார் அட்லீ. இந்தப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி சில தினங்களிலேயே 1000 ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தயாரித்து நடிக்கவும் செய்திருந்த ஷாருக்கானிற்கு படம் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முன்னதாக விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை ஹாட்ரிக் வெற்றியாக்கிய அட்லீக்கு ஜவான் படம் சர்வதேச அளவிலான ரீச்சை கொடுத்துள்ளது.
இந்நிலையில் அட்லீயின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அடுத்ததாக ஷாருக்கான் -விஜய் கூட்டணியில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் சர்வதேச அளவில் 3000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்றும் அவர் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இரு ஹீரோக்களையும் இணைப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் அதற்கு முன்னதாக தெலுங்கில் சூப்பர்ஹிட் ஹீரோவான அல்லு அர்ஜூனுடன் அட்லீ இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இயக்குநர் அட்லீ: இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ஷங்கரின் உதவி இயக்குநராக தொடங்கி ராஜா ராணி என்ற படத்தில் இயக்குநராக மாறியது. இந்தப் படம் பல படங்களின் சாயலை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும் படத்தின் மேக்கிங், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஆகியவை படத்தை ப்ரெஷ்ஷாக காட்டியது. இந்தப் படம் ஆர்யா, நயன்தாரா உள்ளிட்டவர்களின் கேரியரில் மட்டுமில்லாமல் இயக்குநர் அட்லீக்கும் சிறப்பாக அமைந்தது. அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை விஜய் கேரியரில் கொடுத்திருந்தார் அட்லீ.
அட்லீயின் வேற லெவல் ப்ளான்: தற்போது விஜய் The greatest of all time படத்தில் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அடுத்தப்படத்தில் அட்லீயுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் 3000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்றும் முன்னதாக பேட்டியொன்றில் அட்லீ நம்பிக்கை தெரிவித்திருந்தார். இரு ஹீரோக்களும் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தெற்கையும் வடக்கையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
அட்லீ -அல்லு அர்ஜூன் கூட்டணி: இதனிடையே அடுத்ததாக அல்லு அர்ஜூனை நாயகனாக வைத்து அட்லீ அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின்மூலம் டோலிவுட்டில் அட்லீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். அல்லு அர்ஜூனின் 23வது படமாக இந்தப் படம் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. படம் AAA என்றும் கூறப்பட்டுள்ளது. அட்லீ -அல்லு அர்ஜூன் மற்றும் அனிருத் காம்பினேஷனில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது புஷ்பா 2 படத்தின் வேலைகளில் பிசியாக உள்ளார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தை தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் இணையவுள்ளார்.
ஆகஸ்ட்டில் சூட்டிங்: அல்லு அர்ஜூனின் AA22 படத்தை திரிவிக்ரம் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக அல்லு அர்ஜூன் -அட்லீ கூட்டணியில் AA23 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது அட்லீ ஈடுபட்டுள்ளார். புஷ்பா 2 படத்தை தொடர்ந்து திரிவிக்ரம், சந்தீப் ரெட்டி, நெல்சன் திலீப்குமார், கொரட்டாலா சிவா உள்ளிட்ட இயக்குநர்களுடன் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து இணையவுள்ள நிலையில், இந்த லிஸ்ட்டில் அட்லீயும் தற்போது இணைந்துள்ளார். இந்தக் கூட்டணி அல்லு அர்ஜூன் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











