Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில் வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்தியேகன், கார்த்தி பட இயக்குனருக்கு சென்னையில் திருமணம் நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம், ரெமோ. இதை ஆர்.டி.ராஜா தயாரித்து இருந்தார்.
இதில் சிவகார்த்திகேயன், நர்ஸ் வேடத்தில் கீர்த்தி சுரேஷை ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரசிக்கப்பட்டன.
புது போர்ஷே காரில் பெங்களூர் விசிட்.. அம்மாவான மேக்னா ராஜை நேரில் வாழ்த்திய நட்சத்திர ஜோடி!
இயக்குனராக அறிமுகம்
இந்தப் படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சதீஷ், யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார்.
பர்ஸ்ட்லுக் போஸ்டர்
2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் படம், சுல்தான். இதில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயதசமி நாளான நேற்று வெளியானது.
சென்னையில் திருமணம்
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் சென்னையில், நேற்று திருமணம் நடந்தது.
சுல்தான் ஷூட்டிங்
எளிமையாக நடந்த இந்த திருமணத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் கார்த்தி, சுல்தான் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோவை பதிவு செய்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.