திருவள்ளுவர் சிலை.. கைகட்டி நிற்கும் அருண் விஜய்.. ட்விஸ்டுடன் வெளியான வணங்கான் படத்தின் அப்டேட்!
சென்னை: சென்னை பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் வணங்கான். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு கலைஞரும் எப்படியாவது சாதிக்க வேண்டும், மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆசைப்பட்டவர் தான் நடிகர் அருண் விஜய். இவர், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் இவர்களுக்கு முன்பாகவே சினிமாத் துறையில் வந்துவிட்டாலும் அவருக்காக சரியான அங்கீகாரம் கிடைக்காமல் சினிமாவில் கடுமையாக போராடினார்.

என்னை அறிந்தால் விக்டர்: அருண் விஜய், சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில்,பல தோல்வித் திரைப்படங்களை கொடுத்ததால், ராசி இல்லாத நடிகர் என அனைவராலும் ஒதுக்கப்பட்டார். அந்த நேரத்திலும் மனம் தளராமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து, கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்தார். இவரின் நீண்ட வருடங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் அருண் விஜய்யின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதுவும் வில்லன் அவதாரத்தில் நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார்.
மிஷன் சாப்டர் 1: அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனக்கு தகுந்த கதைகளை தேர்வு நடித்து வருகிறார் அருண் விஜய். பொங்கல் பண்டிகைக்கு அவரின் நடிப்பில், 'மிஷன் சாப்டர் 1' என்கிற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வணங்கான்: நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடித்து வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட்டானார். இதையடுத்து வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலைகளை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வணங்கான் ரிலீஸ் தேதி: இந்நிலையில், வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வணங்கான் படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குநர் பாலாவும், அருண் விஜய்யும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேனானந்தர் பாறையை சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கு சூரிய அஸ்தமனத்தின் போது, கையில் ஜெபமாலையுடன் விவேகானந்தர் பாறை வளாகத்தில் மோடி தியானத்தில் அமர்ந்திருந்தார். இந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், தயாரிப்பாளரும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைப் பார்ப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்து இருக்கிறார். தற்போது இது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











