தூக்கிப்போட்டு பந்தாடும் அருண்விஜய்.. அந்த சிங்க கர்ஜனை வேறலெவல்..வெளியானது வணங்கான் டீசர்!
சென்னை: சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீஸர் வெளியானது.
நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே சூர்யாவின் சினிமா பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா மூன்றாவது முறையாக பாலாவுன் கை கோர்த்தார். தனது 2டி நிறுவனம் சார்பில் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

படப்பிடிப்பின் போது அடிக்கடி பாலா சூர்யாவிற்கு இடையே சண்டை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சூர்யா அறிக்கை வெளியிட்டு வணங்கான் படத்தில் இருந்து விலகினார். விலகுவதற்கான எந்த காரணம் இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. இதையடுத்து, இந்த படத்தில் அருண் விஜய் இணைந்தார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: கடந்த ஆண்டு வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் உடல் முழுவதும் சேறுடன் காணப்பட்ட அருண் விஜய், ஒரு கையில் பெரியாரையும் மறுகையில் பிள்ளையாருடன் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இந்தப் போஸ்டரின் மூலம் பாலா எதை சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

சிங்க கர்ஜனை: இந்த நிலையில் ஏற்கெனவே படக்குழு அறிவித்தபடி படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் டீசர் தொடங்குகிறது. தேவாலயத்தின் பின்னணியில், நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் அருண் விஜய் காணப்படுகிறார். மேலும், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோரும் இந்த திரைப்படத்தின் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ள இந்த திரைப்படத்தில், கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது. மேலும், அந்த டீசரின் ஒரு காட்சியில், சிங்க கர்ஜனை செய்துள்ளார். அது வேற லெவில் இருப்பதாக ரகிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்பார்ப்பு அதிகரிப்பு: சுரேஷ் காமாட்சியின் வி புரோடக்ஷன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தினை, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வணங்கான் படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார், சில்வா சண்டை மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பி ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











