Vanangaan Public Review: பொண்ணுங்க மேல கை வெச்சி பாருடா? சம்பவம் செய்த பாலா.. ரசிகர்கள் விமர்சனம்!

பாலா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான படம் வணங்கான். இப்படம் ஜனவரி 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால், கேடிஎம் பிரச்சனை காரணமாக 9,10 மற்றும் 11.30 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 12 மணிக்கு மேல் தான் படம் வெளியானது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். மிஸ்கின், சமுத்திரகனி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

படம் பார்த்த ரசிகர் ஒருவர்,வணங்கான் படத்தில் அருண்விஜய் தனது மொத்த திறமையையும் காட்டி இருக்கிறார். பெண்ணுங்க மேல கை வெச்சா என்ன நடக்கும் என்பதை படத்தில் காட்டி விட்டார் பாலா. சக மனிதர்களுக்கும், சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்பதுதான் படத்தின் கான்செப்ட். இப்படம் பாலாவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாகவே அமைந்திருக்கிறது. அருண் விஜய், மிஸ்கின் நடிப்பு, பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது.

vanangaan bala public review

படம் நன்றாக இருக்கு: படம் நன்றாக இருந்தது, திருநங்கைகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக பாலா அவர்கள் ஒரு படத்தை எடுத்து வைக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாலாவின் பெயரை திரையில் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருண் விஜய், ஊமையாக நடித்திருந்தாலும் தன் நடிப்பின் மூலம் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். சும்மா ஜாலிக்காக இந்த படத்தை பார்க்காமல், ஒரு கருத்தை சொல்லும் படமாக உள்ளது. வழக்கமாக இது போன்ற படத்தை ஓடவிடமாட்டார்கள், ஆனால், அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

பெண்களுக்கான படம்: இயக்குநர் பாலா தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் வலியை சொல்வதுதான் பாலாவின் ஸ்டைல். இப்படத்தில், மாற்றுத்திறனாளிகளின் வலியை கூறியிருக்கிறார். குறிப்பாக, பார்வையற்ற பெண்களை ஆபாசமாக பார்க்கும் வக்கிர புத்தி ஆண்கள் பற்றியும், அதற்கான தண்டனைகள் குறித்தும் இந்த படத்தில் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு பெண்கள் மீது மதிப்பு வரும் என்றார்.

அருண்விஜய் ஸ்கோர் செய்துவிட்டார்: பாலா படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்து இருக்கிறார். அருண் விஜய் நன்றாக நடித்து இருக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் பார்த்த அருண் விஜய் இல்லை. இந்த படத்தில் பாலாவின் ஹீரோக்கள் வரிசையில் அருண் விஜய் இணைந்துவிட்டார். பொதுவாக பாலாவின் படத்தை பார்க்க முடியாது, அனைத்து விஷயமும் அப்பட்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தில் அந்த மாதிரி காட்சிகள் எதுவும் இல்லை. படத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X