கைவிட்ட விக்ரம்.. கை கொடுக்கும் சூர்யா.. மீண்டு(ம்) வருகிறார் பாலா.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: மகன் த்ருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்த நடிகர் விக்ரம் இயக்குநர் பாலாவின் சினிமா வாழ்க்கைக்கே தற்காலிக எண்ட் கார்டை போட்டு விட்டார்.

வர்மா பட பிரச்சனை காரணமாக அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வந்த இயக்குநர் பாலாவுக்கு, தற்போது நடிகர் சூர்யா கரம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் வரிசை கட்டி பல படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் பாலா படத்தையும் தயாரிக்கப் போவதாக ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என வித்தியாசமான கதைகளை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து தேசிய விருது இயக்குநர் என்கிற பெயரை பெற்றவர் இயக்குநர் பாலா. விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு முகவரியாகவும் இருந்துள்ளார்.

விக்ரமுக்கு வாழ்க்கை

விக்ரமுக்கு வாழ்க்கை

ஹீரோவாக நடிக்க வந்து ஏகப்பட்ட படங்கள் நடித்தும் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த நடிகர் விக்ரமுக்கு சினிமாவில் நல்லதொரு வாழ்க்கையை சேது படத்தின் மூலம் அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பாலா என்பது அனைவருக்கும் தெரியும். சேது படத்தைத் தொடர்ந்து பிதாமகன் படமும் விக்ரமுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

நந்தா

நந்தா

சூர்யாவுக்கு நந்தா எனும் படத்தை இயக்கி அவருக்குள் இருக்கும் நடிப்பின் நாயகன் படத்தை தட்டி எழுப்பியவரும் இயக்குநர் பாலா தான். நந்தா படத்தில் நடித்த சூர்யாவுக்கும் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பாலாவுக்கும் ஏகப்பட்ட விருதுகள் குவிந்தன.

சூர்யாவா இது

சூர்யாவா இது

சூர்யாவால் இந்த அளவுக்கு காமெடியாக நடிக்க முடியுமா என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் வாய் பிளந்து பார்க்க வைத்தது பிதாமகன் படம் தான். அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யாவுக்கு கொடுத்திருந்தால் ரொம்பவே பொருத்தமாகவே இருந்திருக்கும். ஆனால், கிடைக்கவில்லை. இருந்தாலும் மக்களின் விருதுக்கு முன்னால் தேசிய விருது ஒன்றும் பெரிதல்ல என ஏகப்பட்ட பிரபலங்கள் சூர்யாவை பாராட்டித் தள்ளினர்.

ஒதுங்கிய அஜித்

ஒதுங்கிய அஜித்

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து முன்னணி நடிகர்களாக மாறியவர்கள், அதற்கு பிறகு தொடர்ந்து அவரது படங்களில் நடிக்காமல் விலகி சென்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவரது படங்களில் நடிக்க ஏற்படும் கஷ்டம் காரணமாக அவரை விட்டு விலக ஆரம்பித்தனர். நான் கடவுள் படத்தில் முதலில் நடிகர் அஜித் நடிக்க இருந்தது. ஆனால், சில பல காரணங்கள் காரணமாக அவருக்கு பதில் ஆர்யா அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆர்யா, விஷால், அதர்வா, சசி குமார் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் கூட்டு சேர்ந்து நல்ல படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வந்தார் இயக்குநர் பாலா.

விக்ரம் வாரிசு

விக்ரம் வாரிசு

இயக்குநர் பாலாவும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் மட்டுமின்றி தன்னை போலவே தனது மகனுக்கும் வெற்றி படத்தோடு சினிமா வாழ்க்கை தொடங்க வேண்டும் என நினைத்த விக்ரம் இயக்குநர் பாலாவை வைத்து த்ருவ் விக்ரமின் அறிமுக படத்தை இயக்க வைத்தார்.

சிக்கலில் பாலா

சிக்கலில் பாலா

இதுவரை தனது பாணியில் படங்களை இயக்கி வந்த இயக்குநர் பாலாவிடம் தெலுங்கில் வெளியாகி ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்கிற உத்தரவு தான் இயக்குநர் பாலாவை சிக்கலில் கொண்டு வந்து விட்டது என ஏகப்பட்ட சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

நல்லா இல்லை

நல்லா இல்லை

இத்தனை ஆண்டுகளாக ஏகப்பட்ட படங்களை இயக்கி தனது முத்திரையை பதித்த இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் நல்லா இல்லை எனக் கூறி இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை உருவாக்கி விட்டனர். அதன் பிறகு இன்னமும் அடுத்த படத்தை இயக்காமல் இருக்கிறார் பாலா.

சூர்யா தயாரிப்பில்

சூர்யா தயாரிப்பில்

இந்நிலையில், இயக்குநர் பாலா மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். நடிகர் சூர்யா 2டி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக ஏகப்பட்ட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் பாலாவின் புதிய படத்தையும் சூர்யா தயாரிக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

ஹீரோ யார் தெரியுமா?

ஹீரோ யார் தெரியுமா?

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரிக்கப் போகும் பாலாவின் புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க அதர்வா ஓகே சொல்லி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X