சசிகுமாருக்கு லெட்டர் எழுதி நெற்றியில் முத்தம் கொடுத்த பாலா.. காரணம் என்னனு தெரிஞ்சுக்கோங்க

சென்னை: இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை நடைபெற்றது. 23ஆம் ஆண்டு சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்கள் சில படங்களும் திரையிடப்பட்டது. இதில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் திரையிடப்பட்டது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த ஆண்டு அவரது 50ஆம் ஆண்டு திரை வாழ்க்கை என்பதால், அவரது படையப்பா படமும் திரையிடப்பட்டது. இதில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்த சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருந்து அளிக்கப்பட்டது. விருது வாங்கிய அவருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார். இது மட்டும் இல்லாமல், சசிகுமாருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தும் வாழ்த்தி உள்ளார்.

பாலா எழுதியுள்ள வாழ்த்து மடலில், "பேரன்பு சசி. சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம்.கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன் பேராற்றல் கொண்டவன்.

Director Bala Appreciates Sasikumar For Who Won Best Actor Award aT 23rd Chennai Film Festival

பெருமை: கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

அண்ணன் பாலா: மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்கள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருkகிற அந்தச் "சம்பவக்காரன் சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன். அண்ணனாக மகிழ்ந்து, பாலா" என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகுமார் - பாலா: இன்றைக்கு நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் சசிகுமார் அடிப்படையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதேபோல் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது, குரு - சிஷ்யன் என்பதைக் கடந்து, அண்ணன் - தம்பி உறவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X