twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதார்த்த இயக்குனர் பாலாவிற்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

    |

    சென்னை : எதார்த்தமான திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா.

    Recommended Video

    DIRECTOR BHARAT BALA EXCLUSIVE TALK | மீண்டும் எழுவோம் | V-CONNECT | Filmibeat Tamil

    இவர் இயக்கிய முதல் படமே பல நாட்கள் வெளியாகாமல் பல போராட்டங்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிக விருதுகளை பெற்ற இயக்குனர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

    எதார்த்தமான கதைகளுக்கும் விருதுகளுக்கும் பெயர்போன இயக்குனர் பாலா இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதாப் போத்தன் பகிர்ந்த ஸ்டெப்னி வீடியோ வைரலாகிறது!பிரதாப் போத்தன் பகிர்ந்த ஸ்டெப்னி வீடியோ வைரலாகிறது!

    எதார்த்தமான கதை

    எதார்த்தமான கதை

    ஒரு திரைப்படத்தை ரசிக்க வேண்டுமென்றால் அதில் பல்வேறு மாயாஜாலங்களும் பல கலர்ஃபுல் காட்சிகளும் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று இருந்து வந்த நிலையில் அதையெல்லாம் உடைத்து எதார்த்தமான கதைகளையும் எதார்த்தமான நடிகர்களின் நடிப்பையும் வெளிக்கொண்டு வந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா.

    விக்ரமை வைத்து

    விக்ரமை வைத்து

    இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த பாலா தனது முதல் படமான சேது திரைப்படத்தை சியான் விக்ரமை வைத்து இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். சியான் விக்ரம் சேது படத்திற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் அது எதுவும் கைகொடுக்காமல் தோல்வியையே தழுவி வந்த நிலையில் மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பாலாவுடன் இணைந்து சேது படத்தில் பணியாற்றியிருந்தார்.

    ஒரு சிலரே பார்த்தனர்

    ஒரு சிலரே பார்த்தனர்

    பாலாவும் விக்ரமும் சேது படத்தின் மீது வைத்த நம்பிக்கையை பல தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் வைக்காததால் பல ஆண்டுகளாக இந்த படம் வெளியிட படாமலேயே கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு பல தடைகளை தாண்டி இந்த படம் திரையில் வெளியிடப்பட்ட போது முதல்நாள் காட்சியில் ஒரு சிலரே வந்து பார்த்த நிலையில் பார்த்தவர்களின் விமர்சனங்களின் மூலம் இந்த படம் பலரையும் சென்றடைந்து பின் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இந்த படத்தை ரசித்து பின் மிகப்பெரிய வெற்றிப்படமாகி பாலா மற்றும் விக்ரமின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது

    தேசிய விருது

    தேசிய விருது

    இயல்பான நடிப்பு, எதார்த்தமான வசனம் என அனைவரின் மனதிலும் காதலை புகுத்தி மனதில் ஒரு பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியது இந்த படம். பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான இந்த படம் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சேது படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

    தனி முத்திரை பதித்துள்ளார்

    தனி முத்திரை பதித்துள்ளார்

    தனது முதல் வெற்றியை கொடுத்த பாலாவின் மீது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சேது படத்தை தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என இயக்கி தொடர்ந்து தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்று இன்று வரை வெற்றி இயக்குனராக தனி முத்திரை பதித்துள்ளார்.

    உச்சம் தொட்ட இயக்குனர்

    உச்சம் தொட்ட இயக்குனர்

    இவரது திரைபடங்களில் எதார்த்தத்தை உச்சம் தொட்ட இயக்குனர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜூலை 11 ஆம் தேதியான இன்று இவர் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரின் நண்பர்களும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு மக்களும் இவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

    English summary
    Director Bala celebrates his 54th birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X