நாத்திகர் பாலா ஆத்திகராகிட்டாரா?.. என்ன காரணம்?.. எல்லாமே தொடர் அடியால்தானா?
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக வணங்கான் திரைப்படம் வெளியானது. அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் விரைவில் பட பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க பாலாவுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இதுவரை இயக்கிய எட்டு படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. ஹிட் என்பதை தாண்டியும் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை அனைவராலும் அந்தப் படங்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு பெரிய அடையாளத்தையும் வெளிச்சத்தையும் வாங்கிக்கொடுத்தவர் பாலா என்பதும் கவனிக்கத்தக்கது.
சில பிரச்னைகள்: முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர் என்று பெயர் எடுத்த பாலாவுக்கு சமீப காலமாக சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதாவது தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அதற்கு பலர் காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. பெர்சனல் வாழ்க்கையில் அந்தப் பிரச்னையை சந்தித்த அவர் தனது சினிமா வாழ்க்கையிலும் ஒரு பிரச்னையை சந்தித்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பாலா.

பாலாவுக்கு கரும்புள்ளி: படத்தின் முழு வேலைகளும் முடிந்து விக்ரம் அந்தப் படத்தை பார்த்தார். ஆனால் அந்தப் படத்தில் விக்ரமுக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாக அந்தப் படத்தை பரணில் வைக்க சொல்லிவிட்டார். அடையாளம் கொடுத்த இயக்குநரையே விக்ரம் அவமதித்துவிட்டாரே என்று பலரும் கொந்தளிப்படைந்தார்கள். ஆனால் பாலாவோ அதுகுறித்து நாகரீகமாக ஒரு அறிக்கையை விட்டுவிட்டு அமைதியானார். மேலும் தான் எடுத்த வர்மா படத்தையும் ரிலீஸ் செய்தார். இருப்பினும் படம் பெரிதாக யாரையும் கவரவில்லை.
வணங்கான்: இப்படி தொடர்ந்து சறுக்கிக்கொண்டிருந்த பாலா எப்படியாவது மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்று நினைத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினா. ஒரு ஷெட்யூல் நடித்த அவர் படத்திலிருந்து விலகினார். அதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடித்தார்.கடந்த ஜனவரி மாதம் படம் ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் இத்தனை வருடங்களாக வெளிப்படாத அருண் விஜய்யின் திறமை இப்படத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. இதனால் அவரும் ஹேப்பியாக இருக்கிறார். கண்டிப்பாக இனி அருணை நிறைய படங்களில் ஹீரோவாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாவுக்குள் ஏற்பட்ட மாற்றம்: பாலாவை பொறுத்தவரை அடிப்படையில் அவர் ஒரு தீவிரமான பகுத்தறிவுவாதி. நான் கடவுள் படத்தில் எல்லாம் கடவுளை கெட்டவார்த்தை சொல்லி ஒரு கேரக்டர் திட்டும்படி சீன் வைக்கும் அளவுக்கு அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் ஆவார். அந்தப் படத்துக்கு தேசிய விருது வென்ற பிறகும் கடவுள் குறித்து அவர் பேசியிருந்தது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் பாலா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அங்கு வந்த மற்ற பக்தர்கள் பாலாவை பார்த்தவுடன் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள். பாலா கோயிலுக்கு சென்றதை பார்த்த நெட்டிசன்களோ 'தொடர்ந்து வாங்கிய அடியால் நாத்திகரான பாலா ஆத்திகராகிட்டாரோ? என்று கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











