சூர்யாவுடன் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டா?.. பாலா சொல்லிய செம பதில்

சென்னை: Bala (பாலா) நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கு இயக்குநர் பாலா பதில் சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் பாலா இந்திய அளவில் பிரபலமான இயக்குநர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தின் டைட்டில் கார்டில் பாலாவுக்கும் க்ரெடிட் கொடுத்திருப்பார். பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இப்போது சியானாக வலம் வரும் விக்ரமும் சேது படத்தின் மூலம் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் நிலைக்க வைத்தவர்.

Director Bala has answered whether there is a chance to reunite with actor Suriya

விளிம்பு நிலை மனிதர்களுக்கானவர்: முதல் படம் சேது மெகா ஹிட்டானாலும் பாலா அடுத்தடுத்து தொட்ட கதைக்களங்கள் வித்தியாசமானவை. தனது இரண்டாவது படமாக நந்தாவை இயக்கினார். அதுவரை ஈழத்து அகதிகளை பற்றி தமிழ் சினிமாவில் எந்த படைப்பாளியும் தொடாத சூழலில் பாலா அந்த விவகாரத்தை தொட்ட்டார். தொடர்ந்து, பிதாமகன் படத்தில் இடுகாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த சமூகத்துக்குள் வந்தால் என்ன நடக்கும் என்று காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

நான் கடவுள் பாலா: பிதாமகனுக்கு அடுத்ததாக அவர் இயக்கிய நான் கடவுள் படம் வசூல் ரீதியாக அடிவாங்கினாலும் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை தழுவி எடுத்தாலும் அந்தக் கதையில் பாலா தனது மேக்கிங் ஸ்டைலையே வைத்திருப்பார். குறிப்பாக, மரணம் என்பது வேண்டாம் என்று பலரும் யோசித்த சூழலில் மரணம் என்பது விடுதலை என்ற கருத்தை தைரியமாக, ஆழமாக பதித்திருந்தார் பாலா.

சரிவை சந்தித்த பாலா: அதன் பிறகு அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை மட்டுமின்றி விமர்சனத்தை சந்தித்தன. அதேபோல் அர்ஜுன் ரெட்டியை விக்ரம் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் பாலாவின் வெர்ஷன் கிடப்பில் போடப்பட்டது. இந்த சம்பவம் அடங்குவதற்குள்ளாகவே அவருக்கு விவாகரத்தும் நடந்தது.

பிரச்னையான வணங்கான்: திரை வாழ்க்கையில் வர்மா மூலம் விழுந்த அடி, தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து மூலம் விழுந்த அடி என இருந்த பாலாவுக்கு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் சூர்யா அதிலிருந்து வெளியேறினார். எல்லா விஷயங்களுக்கும் அமைதியாக இருக்கும் பாலா இதிலும் அமைதி காத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மீண்டும் வாய்ப்பு?: இந்த சூழலில் மிஷ்கின் இசையமைத்திருக்கும் டெவில் திரைப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் பாலா. நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்த அவரிடம் செய்தியாளர்கள், சூர்யாவுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேட்டனனர். அதற்கு பதிலளித்த அவர், இது என்ன கேள்வி. என் தம்பியுடன் இணைவதற்கு என்ன வாய்ப்பு என்று கூறி சென்றார். இதன் மூலம் சூர்யா மீது பாலாவுக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X