என்னது ஹீரோயின்களை காதலித்தாரா பாலா?.. அவரே ஓபனா சொல்லிட்டாரே.. யாரா இருக்கும்?
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க பாலாவும், சுரேஷ் காமாட்சியும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவும், பாலா 25 விழாவும் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இதுவரை இயக்கிய எட்டு படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. ஹிட் என்பதை தாண்டியும் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை அனைவராலும் அந்தப் படங்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு பெரிய அடையாளத்தையும் வெளிச்சத்தையும் வாங்கிக்கொடுத்தவர் பாலா என்பதும் கவனிக்கத்தக்கது.

சில பிரச்னைகள்: முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர் என்று பெயர் எடுத்த பாலாவுக்கு சமீப காலமாக சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதாவது தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அதற்கு பலர் காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. பெர்சனல் வாழ்க்கையில் அந்தப் பிரச்னையை சந்தித்த அவர் தனது சினிமா வாழ்க்கையிலும் ஒரு பிரச்னையை சந்தித்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பாலா.
கரும்புள்ளி: படத்தின் முழு வேலைகளும் முடிந்து விக்ரம் அந்தப் படத்தை பார்த்தார். ஆனால் அந்தப் படத்தில் விக்ரமுக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாக அந்தப் படத்தை பரணில் வைக்க சொல்லிவிட்டார். அடையாளம் கொடுத்த இயக்குநரையே விக்ரம் அவமதித்துவிட்டாரே என்று பலரும் கொந்தளிப்படைந்தார்கள். ஆனால் பாலாவோ அதுகுறித்து நாகரீகமாக ஒரு அறிக்கையை விட்டுவிட்டு அமைதியானார். மேலும் தான் எடுத்த வர்மா படத்தையும் ரிலீஸ் செய்தார். இருப்பினும் படம் பெரிதாக யாரையும் கவரவில்லை.
வணங்கான்: இப்படி தொடர்ந்து சறுக்கிக்கொண்டிருந்த பாலா எப்படியாவது மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்று நினைத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். ஒரு ஷெட்யூல் நடித்த அவர் படத்திலிருந்து விலகினார். அதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடித்திருக்கிறார் பாலா. படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
பாலா 25: அந்த விழாவோடு சேர்த்து பாலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததன் காரணமாக பாலா 25 விழாவும் நடத்தப்பட்டது. இதில் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் சிவக்குமாருக்கும், பாலாவுக்கு கேள்வி பதில் செஷன் வைக்கப்பட்டது. அப்போது பாலாவிடம் சிவக்குமார், 'சேது என்ற காதல் படத்தை இயக்கி இயக்குநராக கவனம் பெற்ற நீங்கள் சினிமாவில் எந்த ஹீரோயினையாவது காதலித்திருக்கிறீர்களா?.. உங்களை யாரேனும் காதலித்திருக்கிறார்களா?' என்று கேள்வி கேட்டார்.
இரண்டு, மூன்று ஹீரோயின்கள்: அதற்கு பதிலளித்த பாலா, 'இரண்டு, மூன்று இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இப்போது திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் காரணமாக பெயர் சொல்ல விரும்பவில்லை' என்று ஓபனாக சொல்லிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பாலா எந்த ஹீரோயினை காதலித்திருப்பார் என்று ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











