பாசத்திற்கு கட்டுப்பட்டு படம் இல்லாமல் பரிதாப நிலையில் பாலா

By Siva

Recommended Video

Director Bala Given Notice to Vikram-காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது-நடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்

சென்னை: வர்மா படம் டிராப்பான பிறகு இயக்குநர் பாலா புதுப்படம் எதுவும் இயக்காமல் சும்மா தான் இருக்கிறாராம்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து அதன் மூலம் தனது செல்ல மகன் த்ருவை ஹீரோவாக அறிமுகம் செய்ய விரும்பினார் விக்ரம்.

திரையுலகில் பல ஆண்டுகளாக போராடிய தனக்கு சேது படம் மூலம் புத்துயிர் கொடுத்த தன் குரு பாலா தான் த்ருவை ஹீரோவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று விக்ரம் ஆசைப்பட்டார்.

பாலா

பாலா

பாலா படம் எடுக்கும் ஸ்டைலே தனி. அவருக்கும், ரீமேக்கிற்கும் செட்டே ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும். இது விக்ரமுக்கு மட்டும் தெரியாதா என்ன?. இருப்பினும் மகன் மீதுள்ள பாசத்தால் பாலாவிடம் அன்புக் கோரிக்கை விடுத்து அவரை அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்ய வைத்தார் விக்ரம்.

விக்ரம்

விக்ரம்

பாலாவுக்கு ரீமேக் எல்லாம் ஒத்து வராது. விக்ரம் பேச்சை கேட்டுக் கொண்டு பாலா சார் தப்பு செய்கிறார் என்று அப்பொழுதே கோடம்பாக்கத்தில் பேசத் துவங்கினார். யார் பேச்சையும் காதில் வாங்காமல் விக்ரமின் அன்புக்காக த்ருவை வைத்து படத்தை எடுத்தார் பாலா. செட்டில் த்ருவ் பாலாவை மாமா என்று அழைத்தால் அவர் அப்படியே உருகியது பிறரை ஆச்சரியப்பட வைத்தது.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

மொத்த படத்தையும் எடுத்து முடித்த பிறகு அது திருப்திகரமாக இல்லை என்று கூறி அதை மறுபடியும் முதலில் இருந்து எடுக்கப் போவதாக தயாரிப்பு தரப்பில் அறிவித்தார்கள். மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியின் உதவியாளர் கிரிசாயாவை வைத்து படத்தை விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். இந்நிலையில் வெளியான ஆதித்ய வர்மா டீஸரும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. பாலா எடுத்ததை விட இது நன்றாக உள்ளதே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

த்ருவ் விக்ரம்

த்ருவ் விக்ரம்

த்ருவின் எதிர்காலத்தை கருதி அமைதியாக இருப்பதாக பாலா தெரிவித்தார். அதன்படி அவர் வர்மா விவகாரம் குறித்து இதுவரை பேசவில்லை. வர்மா டிராப்பான பிறகு பாலா ஆர்யாவிடம் கால்ஷீட் கேட்டாராம். ஆர்யா இதோ, அதோ என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். பாலா தற்போது படம் எதுவும் இயக்காமல் உள்ளார். எந்த இயக்குநருக்கும் கெரியரில் ஏற்றம், இறக்கம் வரும். பாலாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. அவர் இதில் இருந்து மீண்டு வந்து படம் இயக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று நம்புவோமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X