டிவிட்டரில் இணைந்த இயக்குநர் பாலா.. முதல் டிவிட்டே யாருக்குன்னு பாருங்க!
சென்னை: பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாலா டிவிட்டரில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. விக்ரமின் சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். பாலா, பாடலாசிரியர் அறிவுமதியின் மூலம் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

சேது படத்தின் மூலம்..
முன்னதாக அவருடன் புரடெக்ஷன் அசிஸ்ட்டன்ட்டாக பணியாற்றிய பாலா பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கினார். 1999ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக தனது கேரியரை தொடங்கிய பாலா, அந்தப் படத்தின் நடிகர் விக்ரமுக்கு பெரிய பிரேக்கை கொடுத்தார்.

ஏராளமான விருதுகள்
பாலா இதுவரை சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 9 படங்களை இயக்கியுள்ள பாலா, ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

டிவிட்டரில் பாலா
அதன்படி பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்ஃபேர் விருதுக்ள, 14 இன்டர்நேஷனல் விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாலா டிவிட்டரில் இணைந்துள்ளார்.
— Director Bala (IyakkunarBala) May 9, 2021
முதல் டிவிட்..
முதல் டிவிட்டே தமிழக முதல் ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள்.

நாகரிகத்தின் உச்சம்
ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள்
மேலும் வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி- என்ற குறளையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பாலா.


Click it and Unblock the Notifications











