Bala: பாலா இயக்கத்துலயே அவருக்கு பிடித்த இரண்டு படங்கள் எதுன்னு தெரியுமா.. அவரே பகிர்ந்த விஷயம்!

சென்னை: இன்னும் சில தினங்களில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அதிகமான படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், இந்த பொங்கல் ரேஸில் இயக்குநர் பாலாவின் வணங்கான் படமும் இணைந்துள்ளது. நடிகர் அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள வணங்கான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அருண் விஜய் மற்றும் பாலா இருவரும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலா இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான கதைக்களத்துடன் அழுத்தமான திரைக்கதையுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் வணங்கான் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது. இந்தப் படம் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் பாலா பகிர்ந்து வருகிறார்.

bala vanangaan movie arun vijay

வணங்கான் படம்: இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் வசூல்ரீதியாக சிறப்பாக அமைகிறதோ இல்லையோ, அழுத்தமான கதைக்களத்தால் வசீகரித்துவிடும். அந்த வகையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் பொங்கலையொட்டி வரும் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் முன்னதாக சூர்யா நடிக்க கமிட்டான நிலையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங்கும் எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். இதையடுத்து தற்போது அதே கேரக்டரில் அதே டைட்டிலில் இணைந்து நடிகர் அருண் விஜய் நடித்து முடித்துள்ளார்.

bala vanangaan movie arun vijay

நடிகர் அருண் விஜய்: நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன்தான் அருண் விஜய் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனாலும தற்போதைய அவரது நிலை, அவர் போராடி பெற்றது. முன்னதாக அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ள அருண் விஜய், அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் இட்லி கடை படத்திலும் வில்லனாக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அருண் விஜய், மழுப்பலாகவும் சிரிப்புடனும் கடந்து போனார். அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்துவரும அவர் வணங்கான் படத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

bala vanangaan movie arun vijay

பாலாவிற்கு பிடித்த படங்கள்: பாலாவும் வணங்கான் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் படத்தில் முன்னதாக சூர்யா நடித்துவ்நத நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டு அவர் படத்திலிருந்து விலகவில்லை என்றும் மாறாக, படத்தின் சூட்டிங்கை சுமூகமாக மேற்கொள்ள இருவரும் பேசி விலகும் முடிவை எடுத்ததாகவும் பாலா கூறியுள்ளார்.இதனிடையே அவரது இயக்கத்தில் அவரது விருப்பத்திற்குரிய படங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலா நான் கடவுள் மற்றும் பரதேசி படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மாற்றுத் திறனாளிகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவானதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

bala vanangaan movie arun vijay

அதிகமான பிரமோஷன்கள்: வணங்கான் படத்திற்கு அதிகமான பிரமோஷன்களில் பாலா ஈடுபட்டு வருகிறார். அடுத்தடுத்த பேட்டிகளை அவர் கொடுத்துவரும் நிலையில் முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போதும் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார். நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் டைரக்ட் செய்வாரா என்ற கேள்விக்கு கண்டிப்பாக மாட்டேன் என்றும் அவர்கள் பாதை வேறு தன்னுடைய பாதை வேறு என்றும் பளீச்சென்று பதிலளித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X