உண்மையாகவே அவன் ஏறி மிதிச்சிட்டான்.. வருத்திக்கொண்டு நடிக்கக்கூடிய நடிகை.. வரலட்சுமியை புகழ்ந்த பாலா

சென்னை: திறமையான இயக்குநராக இருந்தாலும், பாலா படப்பிடிப்பு தளத்தில் மிக மோசமாக நடந்து கொள்வார். அவர் நினைத்தபடி காட்சி வரவில்லை என்றால், எந்த நடிகராக இருந்தாலும், கொம்பை எடுத்து விளாசிவிடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படிப்பட்ட பாலா நடிகை வரலட்சுமியை புகழ்ந்து பேசி உள்ளார்.

கரகாட்ட கலையை மையப்படுத்தி 2018ம்ஆண் பாலா இயக்கி திரைப்படம் தான் தாரை தப்பட்டை. இந்த படத்தில், சசிகுமார், வரலட்சுமி, ஜிஎம் குமார், சுரேஷ் களஞ்சியம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சசிகுமார் சன்னாசி என்ற கதாபாத்திரத்திலும், வரலட்சுமி சூறாவளி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தார். இதில்,

Director Bala praised Varalakshmi for her role in Tharai Thapattai

தாரை தப்பட்டை: சன்னாசிக்கு தொழில் கரகாட்டம். அதை முடிந்த வரை கௌரவப்படுத்த வேண்டும் என்று போராடுகிறார். வரலட்சுமிக்கு முறைமாமனான சசிகுமார் மீது தீராத காதல், எப்போதும், மாமா மாமா என சதா சன்னாசியைச் சுற்றி வரும் சூறாவளிக்கு, தன் மாமனை யாராவது தவறாக பேசிவிட்டால் சூறாவளியாக மாறிவிடுவாள். அந்த அளவிற்கு அவர் மீது காதல். ஆனால் சன்னாசிக்கு சூறாவளி மீது காதல் இருந்தாலும், அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாமலே இருந்தார்.

படத்தின் கதை: இந்த நேரத்தில், கருப்பையா (சுரேஷ்) சூறாவளியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி திருமணம் செய்து கொள்வார். அவனை நம்பி, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு சூறாவளியை திருமணம் செய்து கொடுக்கிறான் சன்னாசி. ஆனால் அதன் பிறகு சூறாவளி வாழ்க்கையில் உண்மையில் சூறாவளி வீச, என்ன ஆனால் என்றே தெரியாமல் போகிறது. சூறாவளி போனதால் சன்னாசியின் கரகாட்டக் குழுவும் தடுமாற ஆரம்பிக்கிறது. இதுதான் தாரை தப்பட்டை படத்தின் கதை.

சூறாவளியான நடிப்பு: இதில், வரலட்சுமி உண்மையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மாமாவை உருகி உருகி காதலிக்கும் போதும், கடையில் சுரேஷிடம் சிக்கி வாழ்க்கை தொலைக்கும் போதும், அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி இருப்பார். போடா போடிபடத்தில் நடித்த வரலட்சுமி இரண்டாவது படத்திலேயே அப்படி ஒரு பெர்பாமன்சை செய்து இருப்பார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவரை பாராட்டி தனியார் தளம் ஒன்று விருது கொடுத்தது.

திறமையான நடிகை: அந்த விழாவில் பேசிய இயக்குநர் பாலா, படத்தில் ஒரு காட்சியில் சுரேஷ், வரலட்சுமியை எட்டி மிதிக்கும் படி காட்சி இருக்கும் அந்த காட்சியின் போது சுரேஷ் நான் திட்டுவேன் என்ற பயந்து, ஏறி மிதிச்சிட்டான் அந்த காட்சி உண்மையில் நல்லா வந்து இருந்தது. அதன்பிறகு இரண்டு நாள் கழித்து எக்ஸ்ரே எடுத்த போட்டோவை வரலட்சுமி அனுப்பி இருந்தார். அதில், அவரின் கழுத்தில் ஒரு பேக்ச்சர் இருந்தது. சுரேஷ் முதல் முறை மிதிக்கும் போதே, இது நடந்து இருக்கிறது. இருந்தாலும் அந்த சீன் முடியும் வரை அமைதியாக நடித்துவிட்டு இரண்டு நாள் கழித்துத்தான் எலும்பு உடைந்துவிட்டது என்று சொன்னார். உண்மையில் வரலட்சுமி ஒரு திறமையான நடிகை, அவர் படத்திற்காக தன்னை வருத்திக்கொண்டு நடிக்கக்கூடிய நடிகை என்று இயக்குநர் பாலா, வரலட்சுமியை பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X