twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு.. அவன் இவன் பட வழக்கில் ஆஜரான இயக்குநர் பாலா விடுவிப்பு!

    |

    சென்னை: நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவன் இவன் படத்தில் அவதூறாக காட்சி அமைத்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர்கள் பாலா இயக்கத்தில் வெளியான படம் அவன் இவன். இந்தப் படத்தில் விஷால், ஆர்யா, ஜனனி அய்யர், அம்பிகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    ராயல் டிராமா தி க்ரவுன் 5வது சீசன்.. டயானா சார்லஸ் தம்பதியாக நடிக்க போகிறவர்கள் இவர்கள்தான்! ராயல் டிராமா தி க்ரவுன் 5வது சீசன்.. டயானா சார்லஸ் தம்பதியாக நடிக்க போகிறவர்கள் இவர்கள்தான்!

    இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் சர்ச்சையிலும் சிக்கியது.

    சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு

    சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு

    அதாவது அந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

    பாலா ஆர்யா தனித்தனி வழக்கு

    பாலா ஆர்யா தனித்தனி வழக்கு

    இதற்கு அதிருப்தி தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ்.தீர்த்தபதி மகன் சங்கராத்மத்ஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 2018 முதல் பாலா, ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    ஆர்யா மீதான வழக்கு முடித்து வைப்பு

    ஆர்யா மீதான வழக்கு முடித்து வைப்பு

    இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி நடிகர் ஆர்யா சிங்கம்பட்டி வாரிசு சங்கர் ஆத்மஜனிடம் வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் இயக்குநர் பாலா மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    பாலா இன்று ஆஜராக உத்தரவு

    பாலா இன்று ஆஜராக உத்தரவு

    ஆனால் இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து நேற்று இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்றும் இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

    இயக்குநர் பாலா விடுவிப்பு

    இயக்குநர் பாலா விடுவிப்பு

    இன்று இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கிலிருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இயக்குநர் பாலாவின் வழக்கறிஞர் முகம்மது உசேன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

    வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

    அப்போது சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக காட்சி சித்தரிக்கப்படவில்லை என்பதற்கு தாங்கள் வைத்த வாதத்தை ஏற்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, இயக்குநர் பாலாவை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்று கூறினார்.

    பொய் வழக்கில் இருந்து விடுதலை

    பொய் வழக்கில் இருந்து விடுதலை

    இதனை தொடர்ந்து பேசிய இயக்குநர் பாலா பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி என்றார் ஆனால், சிங்கம்பட்டி இளைய ஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Bala released in a case against defaming Singampatti Jamin in Avan Ivan movie. Director Bala appeared in Court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X