பாலுமகேந்திராவுக்கே தெரியாது.. அசிஸ்டெண்ட்டாக சேர்ந்த பாலா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு அவமானமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் பாலா. இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சினிமாவை கற்றுக்கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அவர். கடைசியாக அவர் அருண் விஜய்யை வைத்து இயக்கிய வணங்கான் திரைப்படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.
இந்திய அளவில் கவனம் ஈர்த்த தமிழ் இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு உலகத்தையும், இவ்வுலகில் பலரால் கண்டுகொள்ளப்படாத மனிதர்களையும் அவர்களுடைய வாழ்வியலையும் பேசக்கூடியது. அதேபோல் அவர் இயக்கத்தில் நடித்துவிட்டால் நடிக்க தெரியாத நடிகர்கூட நடிப்பு என்றால் என்னவென்று தெரிந்துகொள்வார்; அப்போதிருந்து அவரது பயணமும் திரைத்துறையில் மாறுபடும். அதனால்தான் அவர் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஏங்கியதுண்டு.
சறுக்கிய பாலா: பாலா தன்னுடைய கரியரின் பீக்கில் இருந்தபோது தொட்டதெல்லாம் ஹிட்டானது. ஆனால் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டதிலிருந்து அதிலிருந்து எழ முடியாமல் சிக்கியிருக்கிறார். விக்ரம் மகனை வைத்து இயக்கிய படத்தில் பட்ட அவமானம் மறைவதற்குள்ளாகவே வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். மனம் தளராத பாலா அருண் விஜய்யை வைத்து இயக்கினாலும் படம் வெற்றியடையாதது ஏமாற்றமே.

பெர்சனல் வாழ்க்கையிலும் பிரச்னை: கரியர்தான் சிக்கலில் இருக்கிறது பெர்சனல் வாழ்க்கை நிம்மதி கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அவர் தனது மனைவி மலரையும் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் இருக்கிறார். இந்த விவாகரத்துக்கு பலரும் தங்களது யூகங்களை காரணங்களாக சொல்லிவருகிறார்கள். எப்படியாவது பாலா அனைத்து சிக்கல்களிலிருந்தும் வெளியே வந்து ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
பாலா வாழ்க்கையில் நடந்தது: அவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவர் அப்படி அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்ததே சினிமா போன்றதுதான். அதாவது சென்னைக்கு ஊரிலிருந்து வந்தவுடன் டி.ராஜேந்தர், பாண்டியராஜனிடம் உதவி இயக்குநராக சேர்வதற்குத்தான் முயன்றார் பாலா. ஆனால் அப்போது இரண்டு பேரும் சக்சஸ்ஃபுல் இயக்குநர்கள் என்பதால்; அவர்களை இவரால் சந்திக்கக்கூட முடியவில்லையாம்.
பாலுமகேந்திராவுக்கே தெரியாது: இதனையடுத்து எப்படியோ பாடலாசிரியர் அறிவுமதியின் அறிமுகம் பாலாவுக்கு கிடைத்திருக்கிறது. அவர் நேரம் பார்த்து பாலுமகேந்திராவிடம் அறிவுமதி உதவி இயக்குநராக பணியாற்றியிருந்திருக்கிறார். பாலாவின் ஆசையை தெரிந்துகொண்ட அறிவுமதியோ, இப்போது சாருக்கு உதவி இயக்குநர் தேவையில்லை என்று சொல்லிவிட்டு; ஒன்று செய் நீ என்னுடன் ஷூட்டிங் ஸ்பாட் வந்து வேலைகளை செய். நேரம் வரும்போது நானே சாரிடம் சொல்லி சேர்த்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
பாலாவும் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்து அத்தனை வேலைகளையும் செய்தாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் குப்பையைகூட பொறுக்கினாராம். ஒருநாள் பிரேக்கில் சாப்பிடுவதற்காக வரிசையில் நிற்க; நீ யார். நீ உதவி இயக்குநரே இல்லையே பிறகு ஏன் சாப்பிட வருகிறாய் என்று ஒருவர் சொல்லி சாப்பாடு போடவில்லையாம். வசதியான வீட்டு பிள்ளையான பாலாவுக்கு ஒரே அவமானமாகிவிட்டதாம். தனியாக சென்று அழ ஆரம்பித்துவிட்டாராம். பிறகு மனதை தேற்றிக்கொண்டு வேலை செய்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடியும்வரை பாலாவை பாலுமகேந்திராவுக்கே யார் என்றே தெரியாதாம். ஒருவழியாக படத்துடைய டப்பிங் பணிகளின்போதுதான் பார்த்தாராம்.
அப்போதும், 'யார் நீ வெளியே போ' என சொல்லிவிட்டாராம். அதுவும் பெரிய அவமானமாக போக; பின்னர் அறிவுமதி பாலுமகேந்திராவிடம் சொல்ல; அடுத்த படமான வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து உதவி இயக்குநராக அதிகாரப்பூர்வமாக சேர்த்துக்கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











