மாஸ் அப்டேட்.. இயக்குநர் பாலாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் பாலாவின் அடுத்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
சியான் விக்ரமுக்கு சேது படத்தை இயக்கி ஹிட் கொடுத்தது போலவே, விக்ரம் மகன் துருவ் விக்ரமுக்கு வர்மா படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் அப்படியே டிராப் செய்யப்பட்டது.
அதன் விளைவாக இயக்குநர் பாலாவின் இமேஜ் சுக்கு நூறாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.

நல்லா இல்லை
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகத்திற்காக முதன் முதலாக ரீமேக் செய்ய பாலா ஒப்புக் கொண்டார். ஆனால், வர்மா படம் உருவாகி டீசர் வெளியான நிலையில், படம் நல்லா இல்லை என தயாரிப்பு தரப்பு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.

அப்செட்டான பாலா
இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் இயக்குநர் பாலாவின் இயக்கத்தை தயாரிப்பு நிறுவனம் குறை கூறியது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெருங்கிய நண்பரான விக்ரமுக்காக பிரச்சனை பெரிதாக்காமல் அப்படியே விட்டு விட்டார் பாலா.

அதன் விளைவாக
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா, அனுஷ்கா என மல்டி ஸ்டாரர்கள் நடிக்க இருந்த படமும் வர்மா படத்தின் சிக்கல் காரணமாக நிறுத்தப்பட்டது. இயக்குநர் பாலா அடுத்து படம் இயக்குவாரா? இயக்க மாட்டாரா? என்ற ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பாலாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாலாவின் அடுத்த படம்
தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடித்து வரும் விசித்திரன் எனும் படத்தைத் தான் இயக்குநர் பாலா தயாரித்து வருகிறார். பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான தார தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள ரீமேக்
வர்மா படத்தை போலவே பாலா தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படமும் ரீமேக் படம் தான். மலையாளத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜோசப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன். இயக்குநர் பத்மகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிகை பூர்ணா, மது ஷாலினி நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ரிலீஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் ஆர்.கே. சுரேஷ் நடித்து இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் உடன் இருக்கும் நல்ல நட்பு காரணமாக விசித்திரன் பட ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சால்ட் பெப்பர் லுக்கில் ஆர்.கே. சுரேஷ் மிரட்டுகிறார். இறுதிகட்ட பணிகளில் என போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்கம் எப்போ
பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தயாரிப்பு படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், பாலாவின் ரசிகர்கள், சார் எப்போ சார் உங்க இயக்கத்தில் படம் வரும் என்றும், அதற்காக காத்திருப்பதாகவும் சீக்கிரம் படம் பண்ணுங்க சார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











