ஒரு வழியாக ஒடிடியில் வருகிறது வர்மா.. தூக்கி வீசப்பட்ட பாலாவின் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா ஒரு வழியாக ஒடிடியில் வெளியாகிறது.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக ரெடியான நிலையில், பாலாவை வைத்தே படத்தை எடுக்க விக்ரம் ஆசைப்பட்டார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா எனும் பெயரில் பாலா ரீமேக் செய்தார்.
டீசர் ரிலீஸ்
இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம், மேகா செளத்ரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வர்மா படத்தின் டீசர் எல்லாம் வெளியாகி படம் ரிலீசுக்கு தயாராகி இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பு தரப்பு, படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த படத்தை ட்ராப் செய்து விட்டு புது டீமைக் கொண்டு இந்த படத்தை இயக்கப் போகிறோம் என அறிவித்தனர்.

அப்செட்டான பாலா
சேது, பிதாமகன் என சியான் விக்ரமுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்த இயக்குநர் பாலா, முதன்முறையாக ரீமேக் படத்தை கையில் எடுத்து, அந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் இப்படியொரு பிரச்சனை உருவானதே என கடும் அப்செட் ஆனார். சியான் விக்ரம், தனது மகனின் எதிர்காலம் கருதி அவரை சமாதானம் படுத்தியது வேறு கதை.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை
அர்ஜுன் ரெட்டி படத்தின் இணை இயக்குநர் கிரிசாயாவை வைத்து தமிழில் ஆதித்ய வர்மா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தனர். துருவ் விக்ரமின் நடிப்பு நல்லா இருந்தாலும், அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் அளவிற்கு இந்த படம் இல்லை என்ற விமர்சனங்கள் குவிந்தன. மேலும், பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது ஆதித்ய வர்மா

ஒடிடியில் ரிலீஸ்
இயக்குநர் பாலாவுக்கு புதுப் படங்கள் ஏதும் அமையாத நிலையில், தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். இந்நிலையில், வர்மா படத்தை ஒடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. Simply South எனும் ஒடிடி தளத்தில் அந்த படம் ரிலீசாக அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

எப்போது ரிலீஸ்
அக்டோபர் மாதம் ஏகப்பட்ட புதுப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒடிடியில் கண்டு ரசிக்க உள்ளனர். நாளை நிசப்தம் மற்றும் க/பெ. ரணசிங்கம் ரிலீசாகிறது. இந்த மாத இறுதியில் சூர்யாவின் சூரரைப் போற்று வெளியாகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் 6ம் தேதி சிம்ப்ளி சவுத் ஒடிடி தளத்தில் வர்மா ரிலீசாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நிச்சயம் அது இருக்கும்
மறுபடியும் ஒரு தமிழ் ரீமேக் அர்ஜுன் ரெட்டியை ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பதை தாண்டி எதனால், பாலாவின் இயக்கத்தை தயாரிப்பு தரப்பு தூக்கி வீசியது என்கிற கோணத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தையும் பார்ப்பார்கள் என்றே தெரிகிறது. ஆதித்ய வர்மா சூப்பரா? வர்மா சூப்பரா? என்கிற கம்பேரிசன் நிச்சயம் இருக்கும்.

கண்டிப்பா ஹீரோயினுக்காக
ஆதித்ய வர்மா படத்தில் நாயகியாக நடித்த பாலிவுட் நடிகை பனிடா சந்துவின் நடிப்புத் தான் படத்தையே சொதப்பியது என ஏகப்பட்ட ரசிகர்கள் புலம்பித் தவித்தார்கள். இந்நிலையில், நடிகை மேகா செளத்ரி உடன் துருவ் விக்ரம் எப்படி ரொமான்ஸ் செய்துள்ளார். எப்படி முத்த மழை பொழிந்துள்ளார் என்பதை நிச்சயம் ரசிகர்கள் காண ஆவலாக இருப்பார்கள் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











