நஷ்டத்தை சரிகட்ட முடிவாம்... டிஜிட்டலில் வெளியாகிறதா, பாலாவின் வர்மா?
சென்னை: துருவ் நடிப்பில் பாலா இயக்கிய 'வர்மா' படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜூன் ரெட்டி' . இதை விக்ரம் மகன் துருவ் நடிப்பில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாலா இயக்கத்தில் துருவ் அறிமுகமாக, ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கருத்து வேறுபாடு
ஷூட்டிங் தொடங்கி படம் ரெடியான நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்தப் படத்தை அப்படியே கைவிட்டுவிட்டு, வேறு இயக்குனரை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

ஆதித்யா வர்மா
அதன்படி கிரிசாயா இயக்கத்தில் துருவ் நடிக்க, படம் உருவானது. இந்தப் படத்துக்கு 'ஆதித்யா வர்மா' என்று டைட்டில் வைத்தனர். இதில் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ராஜா உட்பட பலர் நடித்திருந்தனர்.

நஷ்டம்
கடந்த மாதம் இந்தப் படம் வெளியானது. விக்ரம் மகன் துருவ்வின் நடிப்பு பேசப்பட்டது. அதிக பட்ஜெட் காரணமாக, படம் சுமார் ரூ.7 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல்
நஷ்டத்துக்கு, இரண்டு படங்கள் எடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதால், பாலா இயக்கிய வர்மா படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது நெட்பிளிக்ஸில் படத்தை வெளியிடலாம் என்றும் அதன் மூலம் நஷ்டத்தை சரிகட்டலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











