அதர்வா ஜோடியான கயல் ஆனந்தி… படப்பிடிப்பை தொடங்கிய சற்குணம்

By Mayura Akilan

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்க சற்குணம் இயக்கும் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார்.

இந்தப் படபூஜையில் பங்கேற்ற இயக்குநர் சசிகுமார் படப்பிடிப்பை தொடங்கிவைத்தார்.

சற்குணம் இயக்கத்தில் அதர்வா

சற்குணம் இயக்கத்தில் அதர்வா

நடிகர் அதர்வா நடித்துக் கொண்டிருக்கும் ஈட்டி, கணிதன் படங்களோடு சற்குணம் இயக்கத்தில் ஒரு புதுப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா தயாரிப்பில்

பாலா தயாரிப்பில்

தமிழ் சினிமாவில் வெகு சாந்தமான ஹீரோவாக நடித்தவர் அதர்வா. ஆனால் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்திற்கு பிறகு எல்லா கேரக்டர்களையும் வெளுத்து வாங்குவார் என்ற நம்பிக்கையை கோலிவுட்டில் விதைத்து இருக்கிறார்.

பி.ஸ்டுடியோஸ்

பி.ஸ்டுடியோஸ்

அதனால் டைரக்டர்களின் ஹீரோ என்ற அங்கீகாரம் பெற்றுள்ள அதர்வா தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கயல் நாயகி ஆனந்தி

கயல் நாயகி ஆனந்தி

பிரபு சாலமனின் ‘கயல்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஆனந்தி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே ஆனந்தியின் நடிப்பு பற்றி பிரபு சாலமன் பெரிய அளவில் புகழ்ந்து பேசினார். இப்போது பாலா தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

தொடங்கிய படப்பிடிப்பு

தொடங்கிய படப்பிடிப்பு

இப்படத்திற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. முதல்நாள் படப்பிடிப்பினை இயக்குநர் சசிகுமார் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார். முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கப்போகிறார் சற்குணம்.

பாலாவுக்கு பரிவட்டம்

பாலாவுக்கு பரிவட்டம்

நாத்திகம் பேசி கடவுள்களை கிண்டல் செய்யும் பாலா இந்தப் பூஜையில் கலந்து கொண்டு பயபக்தியோடு சாமி கும்பிட்டார். கோயில் குருக்கள் அவருக்கு பரிவட்டம் கட்டியபோது கண்களை மூடி வேண்டிக்கொண்டார்.

நட்சத்திரங்கள் யார் யார்

நட்சத்திரங்கள் யார் யார்

அதர்வா, ஆனந்தியைத் தவிர, சண்டைக்கோழி" லால் , கருத்தம்மா ராஜஸ்ரீ மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கோலிசோடா இசையமைப்பாளர்

கோலிசோடா இசையமைப்பாளர்

இப்படத்தின் ஒளிப்பதிவு P.G.முத்தையா , கோலிசோடா புகழ் அருணகிரி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு T.E.கிஷோர்,சண்டைப்பயிற்சி திலிப்சுப்புராயன், நடனம் - பாபிஆண்டனி.

அதிரடியில் பாலா

அதிரடியில் பாலா

இயக்குனர் பாலா, மிஷ்கின் இயக்கும் 'பிசாசு' படத்தை தற்போது தயாரிக்கிறார். சமீபத்தில் தான் பிசாசு திரைப்படம் பூஜையுடன் துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தையும் பாலா தொடங்கியுள்ளார். தான் இயக்கும் திரைப்படங்களை முடிக்க அதிக நாட்கள் எடுக்கும் பாலா, தான் தயாரிக்கும் படங்களை இவ்வளவு வேகமாக துவங்குவதைக் கண்டு ஆச்சர்யத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X