மிஸ்கின் ஒரு ஓநாய் மாதிரி.. மேடையிலேயே அப்படி பேசிய பாலா.. என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் மிஷ்கின் வீட்டு விழா போல டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டு அவரை வெகுவாக பாராட்டி பேசினர்.
வெற்றிமாறன், பாலா, ஹரி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களை தனது தயாரிப்பில் உருவாகி உள்ள டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மிஷ்கின் அழைத்திருந்தார்.
அதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாலா மிஷ்கின் ஒரு டெவில் என டைட்டிலையும் அவர் போன் நம்பரை தனது போனில் ஓநாய் என்று தான் சேவ் செய்து வைத்திருப்பதாகவும் கூறினார்.

மிஷ்கினின் டெவில்: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி நடித்த பிசாசு 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவரது தயாரிப்பில் உருவாகி உள்ள டெவில் படம் விரைவில் தியேட்டரில் வெளியாக காத்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் நேற்று நடைபெற்றது. ஆதித்யா என்பவர் இயக்கியுள்ள டெவில் படத்தை தயாரித்து அந்த படத்துக்கு இசையும் அமைத்துள்ளார் மிஷ்கின். வித்தார்த், பூர்ணா லீடு ரோலில் நடித்துள்ளனர்.
மிஷ்கின் ஒரு ஓநாய்: சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி உள்ள டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாலா மிஷ்கின் ஒரு டெவில் என்றும் ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்தேன், இளையராஜா தான் அவன் சரியான intellectual எனக் கூறினார். அதன் பின்னர் அவனுடைய வேலைகளை பார்த்து பொறாமைப்பட்டேன். என்னுடைய மொபைலில் இன்னமும் அவனுடைய பெயரை ஓநாய் என்று தான் சேவ் செய்திருக்கிறேன் என்று கூறினார்.
வணங்கானை இயக்கிய மிஷ்கின்: வணங்கான் படம் தனக்கு செட்டாகாது என ஒதுங்கி விட்டார் நடிகர் சூர்யா. மீண்டும் அதே படத்தை அருண் விஜய், பிரியா பவானி சங்கரை வைத்து பாலா இயக்கி உள்ள நிலையில், அந்த படத்தில் உதவி இயக்குநராக உள்ளே நுழைந்த மிஷ்கின் சில காட்சிகளை அவரே கம்போஸ் செய்து இயக்கி அசத்தி இருக்கிறார் என்றும் பாலா பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











