தனிமையில் இருக்கிறேன்.. மாரிசெல்வராஜ் என் வழிநடத்தி..மேடையில் உடைந்து பேசிய பாலா!

சென்னை: இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைந்திரா ஆச்சா நடிப்பில் உருவாகி உள்ள 'மை லார்டு' திரைப்படம் 13ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் பாலா, மாரி செல்வராஜ், லிங்குசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில்,பேசிய பாலா, நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் எப்படி இருக்கு என்பதை மாரி செல்வராஜ் பேசிவிட்டார். அவர் படம் பற்றி பல விஷயங்களை சொல்லிவிட்டார். இது எவ்வளவு மரியாதைக்குரிய படம் என்பதை மாரி செல்வராஜ் வாயிலிருந்து வந்து விட்டதாலே புரிந்து கொள்ள முடிகிறது. படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் முதலில் ஜோக்கர், குக்கூ, ஜப்பான் இப்போது 'மை லார்டு' என எவ்வளவு நக்கலாக பெயர்வைத்து இருக்கிறார். அதே போல படத்தில் சசிக்குமார் ரொம்ப இயல்பாக நடித்து இருக்கிறார்.

My Lord Sasikumar Director Bala
Photo Credit:

மை லார்டு: படத்தின் ஹீரோயின் சைந்திரா ஆச்சா மிகவும் எதார்த்தமாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த கன்னட படம் ஒன்றை பார்த்தேன். அதில் 4 நிமிட உணர்ச்சிபூர்வமான காட்சியில் நடித்து இருந்தார். அந்த நடிப்பை பார்த்து நான் யார் இந்த நடிகை என உற்றுப்பார்த்தேன். இதனால், இந்த நடிகையுடன் அடுத்து நடிக்கும் எந்த நடிகராக இருந்தாலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

மாரிசெல்வராஜ் என் வழிநடத்தி: தொடர்ந்து பேசிய அவர், மேடையின் என் பெயரை சொன்னதுமே மாரி செல்வராஜ் இங்கேயாவது கூடுதலாக இரண்டு நிமிடங்கள் பேசுங்கள் என சொன்னார். அதற்கு காரணம் என்னவென்றால் நான் தனிமையில் இருக்கிறேன் இதனால் எப்போதுமே மாரி செல்வராஜ் தனிமையில் இருக்காதீர்கள் நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் அவர் தான் இப்போது எனக்கு வழிநடத்தியாக இருக்கிறார். இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நான் நம்புகிறேன். அவர் சொன்னது போல மேடையில் நீண்ட நாட்களுக்கு பின் பேசியது சற்று ஆறுதலாக, மனசுக்கு இதமாக இருக்கிறது. மாரி செல்வராஜ் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும் அப்படித்தான் 'மை லார்டு' படமும் இருக்கும் என நான் நம்புகிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X